திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

0
115
MK Stalin Will Participate in Candidate Introduce Meeting For Thiruvarur By Election-News4 Tamil Online Tamil News Website
MK Stalin Will Participate in Candidate Introduce Meeting For Thiruvarur By Election-News4 Tamil Online Tamil News Website

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

முன்னாள் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அவரது தொகுதியான திருவாரூரில் வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே திருவாரூரில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் பார்க்கபடுகிறது.

திருவாரூரில் வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 10-ம் தேதி ஆகும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த தொகுதியை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் இடைத்தேர்தலில் அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளா் பூண்டி கே.கலைவாணன் போட்டியிடுவார் என  கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார். 

இந்நிலையில், திருவாரூர் இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கவுள்ளது. இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசவுள்ளார். மேலும்  இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக வின் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

MK Stalin Will Participate in Candidate Introduce Meeting for Thiruvarur By Election

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here