MK Stalin Appreciates Chennai High Courts Order for Illegal Banner Case-News4 Tamil Online Tamil News Portal
MK Stalin Appreciates Chennai High Courts Order for Illegal Banner Case-News4 Tamil Online Tamil News Portal

திமுகவின் கூட்டணி கட்சியினர் செய்த தவறை கண்டித்த உயர் நீதிமன்றம்: பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின்

சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை வரவேற்று அக்கட்சியினர் சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் பதாகைகளை வைத்திருந்தனர்.

இவ்வாறு மக்களுக்கு இடையூறாக சாலைகளில் பேனர் வைப்பதை எதிர்த்து போராடி வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், விதிகளை மீறி பேனர்கள் வைப்போர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனவும் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்படும் கட்சியில் இணைய வேண்டியது தானே? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும் இவ்வாறு சாலை விதிகளை மீறி பேனர்கள் வைப்பவர்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை தாக்கல் செய்யவும் தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து மறு உத்தரவு வரும் வரையில் தமிழக சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க கூடாது என்று தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க கூடாது என்று தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று! பொதுமக்களுக்கு இடையூறாகப் பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சிலஇடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்!” என்றும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு தனது கட்சியை சேர்ந்தவர்களே அராஜகத்தில் ஈடுபட்டு தலைமைக்கு தொல்லை கொடுக்கும் வகையில் பிரச்சனையை கிளப்பி விடுவதும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதுமாக இருந்தார் திமுக  தலைவர் ஸ்டாலின். தற்போது தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் செய்த தவறை சுட்டிகாட்டி கண்டித்த நீதிமன்ற உத்தரவை வரவேற்று பதிவிட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.