
வன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
அதிரடி பேச்சு,அதிகாரத்திற்கு அஞ்சாமல் பேசுவது, தன்னுடைய இயக்கத்திற்கான விசுவாசம் மற்றும் தான் சார்ந்த சமுதயதிற்கான பாதுகாப்பாக வாழ்ந்தவர் போன்ற புகழுக்கு சொந்தமானவர் தான் வன்னியர் சங்க தலைவரும் பாமகவின் முக்கிய நிர்வாகியுமான மாவீரன் என்று அழைக்கப்படும் காடுவெட்டி ஜெ குரு.கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இவர் மறைந்தது வன்னியர் சமுதாய மக்களுக்கு பேரிழப்பு.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் ஜெகநாதன் – கல்யாணியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் குருநாதன் என்று அழைக்கப்படும் மாவீரன் ஜெ.குரு. இவரின் சொந்த ஊரான காடுவெட்டியை தன் பெயருடன் இணைத்து தான் அவருக்கு ‘காடுவெட்டி குரு’ என்ற பெயர் வந்தது. இவருக்கு மனைவி லதா, விருதாம்பிகை மற்றும் கனல் அரசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1986-இல் காடுவெட்டியில் ஆரம்பத்தில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்த குரு, தங்கள் பகுதியில் உள்ள வன்னியர் மக்களுக்கு தி.மு.க.வில் உரிய முக்கியத்துவம் தரவில்லை என்றும்,வன்னியர் சங்கத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காகவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைந்தார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு விசுவாசமாக நடந்து கொண்ட குரு படிப்படியாக பாமகவின் செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவியை பெற்று பாமகவில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
பிறகு வன்னியர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக வன்னியர் சங்கத் தலைவராகப் பதவியேற்றார். 2001-இல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலும், 2011-இல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் பேசுவதால் இரண்டுமுறை இவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இவர், பங்கேற்கும் கட்சியின் மாநாடு மற்றும் வன்னியர் சங்க மாநாடுகளிலும்,கூட்டங்களிலும் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவதால், ‘வன்னியர் சமுதாய இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார்’ என்று கூறி அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான
மாவீரன் ஜெ.குருவின் பிறந்தநாள் விழா வரும் பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று
கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, அரியலூர் மாவட்டம் காடுவெட்டி
கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி
செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக
தமிழக அரசிடம் முறையான அனுமதியும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேறு சில தரப்பினரும் போட்டியாக அங்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரியிருந்ததால் இரு தரப்பையும் கடந்த 24-ஆம் தேதி அழைத்து அமைதிக் கூட்டம் நடத்திய உடையார்பாளையம் கோட்டாட்சியர், ஜெ.குருவின் பிறந்த நாளையொட்டி அவரது குடும்பத்தினர் மட்டும் மலர் தூவி மரியாதை செலுத்த அனுமதி அளித்துள்ளார். வேறு யாரும் மாவீரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தடை விதித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், காடுவெட்டி கிராமத்தில் மாவீரன் பிறந்தநாளையொட்டி பட்டாசு வெடித்தல், பதாகை அமைத்தல், அன்னதானம் வழங்குதல், மேடை அமைத்து ஒலிப்பெருக்கி மூலம் பேசுதல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்| காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.