Madurai High Court Abandoned the Teachers and Civil Servants in Jacto Geo Struggle-Online Tamil News Channel-News4 Tamil
Madurai High Court Abandoned the Teachers and Civil Servants in Jacto Geo Struggle-Online Tamil News Channel-News4 Tamil

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டத்தில் நீதிமன்றமும் கைவிரித்தது

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நடத்தி வரும் போராட்டம் சார்பாக தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக அரசிற்கு இது சம்பந்தமாக இடைக்கால தடை ஏதும் போட முடியாது என்று கைவிரித்து விட்டது.

தற்போதுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையிலிருந்து ரத்து செய்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், மேலும் 21 மாதங்களுக்கான நிலுவைத்தொகையையும் வழங்க வேண்டும் என்றும், அரசு பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ மற்றும் ஜியோ அமைப்பின் சார்பாக இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 7 வது நாளாக இன்றும் போராட்டம் தீவிரமடைந்து வரும் இந்த சூழ்நிலையில் இதுசம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு வந்தது. அதே வேளையில் தமிழக அரசு எச்சரித்தும் வேலைக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு பதிலாக தற்கால ஆசிரியர்களை நியமிக்கும் வகையில் விண்ணப்பங்களை பெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு ஏன் ஜாக்டோ மற்றும் ஜியோ அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்த கூடாது? தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதால் புதிய பிரச்சனைகளை உருவாக்குவதாகவும், அவர்களும் பணி நிரந்தரம் கோரி போராடுவர் என்றும் தமிழக அரசிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் வழக்கு தொடர்ந்திருந்தால் அரசிடம் கேட்டிருக்கலாம் எனவும்,இந்த போராட்டம் சார்பாக அரசுக்கு இடைக்கால தடை எதுவும் போட முடியாது எனவும்,அரசின் நிதி நிலைமை சம்பந்தமான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவித்துவிட்டார்கள். மேலும் இந்த வழக்கையும் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Madurai High Court Abandoned the Teachers and Civil Servants in Jacto Geo Struggle