TNPSC அரசு தேர்வில் பெரியாரின் பெயருக்கு சாதிய அடையாளம் குறிப்பிட்டதற்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்-திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம்

0
241
M.K. Stalin Condemns on EVR Periyars Name with Caste Identity in the TNPSC Group 2 Question Paper
M.K. Stalin Condemns on EVR Periyars Name with Caste Identity in the TNPSC Group 2 Question Paper

TNPSC அரசு தேர்வில் பெரியாரின் பெயருக்கு சாதிய அடையாளம் குறிப்பிட்டதற்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம்

M.K. Stalin Condemns on EVR Periyars Name with Caste Identity in the TNPSC Group 2 Question Paper: TNPSC அரசு தேர்வில் பெரியாரின் பெயருக்கு சாதிய அடையாளம் குறிப்பிட்டதற்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வுக்கான கேள்வித்தாளில் தந்தை பெரியார் பெயருடன் சாதி அடையாளம் என குறிப்பிட்டிருந்ததற்காக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சாதிப்பெருமை பேசக்கூடாது,சாதி பட்டம் வேண்டாம் என்ற பெரியாருக்கே சாதிய அடையாளமா? என்றும், இவர்கள் இவ்வளவு சாதி வன்மம் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் தேர்வு 2 வினாத்தாளில் ஒரு கேள்வியில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியர் யார் என்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கு 4 பெயர்கள் விடைகளாக கொடுக்கப்பட்டிருந்தன. அதில் முதல் விடை இ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தவறாக அச்சடிக்கப்பட்டிருந்தது. சாதியை எதிர்த்து போராடியவரான தந்தை பெரியாரின் பெயரை தவறாகவும்,சாதிய அடையாளத்துடனும் குறிப்பிட்டது பல்வேறு வகையான சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

M.K. Stalin Condemns on EVR Periyars Name with Caste Identity in the TNPSC Group 2 Question Paper
M.K. Stalin Condemns on EVR Periyars Name with Caste Identity in the TNPSC Group 2 Question Paper

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு வினாத்தாளைத் தயாரித்தவர்கள் எத்தகைய சாதி வன்மம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

திருச்செங்கோடுஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ. ராமசாமி நாயக்கர், காந்திஜி, இராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கேள்வியைத் தயாரித்தவர், சரிபார்த்தவர், மேற்பார்வை செய்த ஆணையத்தின் அதிகாரம் படைத்தவர்களுக்கு முதலில் ஆங்கிலம் தெரியுமா, தமிழ்நாடு தெரியுமா எனத் தெரியவில்லை.

ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதுதான் சுருக்கமாக ஈ.வெ.ரா. அதுகூடத் தெரியாமல், ‘இ’ என்று பிழையாகப் போட்டுள்ளார்கள். கேள்வியைத் தயாரித்தவருக்கு ஈரோடு கூட தெரிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட நபர்களிடம் கேள்வி தயாரிக்கச் சொன்னால், தந்தை பெரியாருக்கு சாதிப்பட்டம் போடத்தானே செய்வார்கள்! இன்றிலிருந்து 90 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1928ம் ஆண்டிலேயே தனது பெயரில் சாதி ஒட்டியிருந்ததை நீக்கியவர் தந்தை பெரியார் அவர்கள். யாரும்

சாதிப்பட்டம் போடக்கூடாது என்றவர் அவர். சாதிப்பெருமை பேசக்கூடாது என்று, சாதி மாநாடுகளிலேயே துணிச்சலாகப் பேசியவர் அவர். எப்போதும் எல்லா நிலையிலும் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றவர் அவர். அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத்தேர்வில் அடையாளப்படுத்துவதும் அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத் தனமான எண்ணத்தை விதைப்பதுமாகும். இதற்கு, காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்யவேண்டும். தமிழக அரசு இந்த அடாத செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிபிட்டுள்ளார்.

இது போன்ற தவறான கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் பதவி விலக வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here