Lucknow Apple Employee Shot dead by Uttar pradesh police for not stopping car-News4 Tamil Online Tamil News Channel
Lucknow Apple Employee Shot dead by Uttar pradesh police for not stopping car-News4 Tamil Online Tamil News Channel
காரை நிறுத்தாமல் சென்றதற்காக உத்திர பிரதேச போலிசார் துப்பாக்கியால் சுட்டதில் ஆப்பிள் சாப்ட்வேர் நிர்வாகி பலி

காரை நிறுத்தாமல் சென்றதற்காக உத்திர பிரதேச போலிசார் துப்பாக்கியால் சுட்டதில் ஆப்பிள் சாப்ட்வேர் நிர்வாகி பலி: உத்தரப் பிரதேசத்தில் காரை நிற்காமல் ஓட்டிச் சென்ற தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி  மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் பலியானார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி (வயது 38). அவர் தனது நண்பருடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இன்று அதிகாலை 1:30 மணியளவில் சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது சாலையில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போலீஸார் காரை மறித்தனர். ஆனால் வேகமாக வந்த கார் நிற்காமல் செல்ல முற்பட்டது. எனினும் வாகன சோதனைக்காக பைக்கில் நின்று கொண்டிருந்த 2 போலீஸாரும் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். கார் வேகமாக மோதியதில், போலீஸாரின் பைக் கீழே சரிந்தது.

 இதையடுத்து விவேக் திவாரி காரை வேகமாக ஓட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் விவேக் திவாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சற்று நேரத்துக்கு பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு கூறியது, ‘திவாரி இன்னொரு நபருடன் காரில் இருந்துள்ளார். அப்போது, ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள், காரிலிருந்து இறங்குமாறு திவாரியிடம் கேட்டுள்ளனார். அப்போது இரு சக்கர வாகனத்தில் காருக்கு அருகில் சென்ற போலீஸை திவாரி மோதியுள்ளார். தொடர்ந்து அவர் அருகிலிருந்த சுவரில் மோதி, தப்பிக்கப் பார்த்துள்ளார். அப்போது தான் போலீஸ் அவரை சுட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளது.

திவாரியை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் இரண்டு போலீஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து கான்ஸ்டபிள் பிரஷாந்த் குமார், ‘சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகத்திற்குறிய ஒரு கார் நின்றிருந்தது. அதற்கு அருகில் சென்று காரில் இருந்த இருவரையும் கீழே இறங்குமாறு தெரிவித்தோம். ஆனால், முறையான பதில் வரவில்லை. நிறுத்தியிருந்த எங்கள் பைக் மீது கார் இடித்தது. மீண்டும் அதைப் போலவே கார் வந்து பைக்கை இடித்தது. மூன்றாவது முறை என்னை நோக்கி கார் வந்த போது, வேறு வழியில்லாமல் கார் ஓட்டுநரை சுட்டேன்’ என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் திவாரியுடன் காரில் இருந்த நபர் போலீஸில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அவர், ‘எங்கள் காரை பலவந்தமாக நிறுத்தப் பார்த்தனர் இருவர். திவாரி காரை நிறுத்தவில்லை. அந்த இடத்திலிருந்து விலகத்தான் அவர் முயன்றார். அவர்கள் யாரென்று கூட எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. நாங்கள் தெரியாமல் பைக்கை மோதிவிட்டோம். அப்போது, பைக்கில் இருந்து இறங்கிய நபர் லத்தியுடன் கார் அருகில் வந்தார். இன்னொருவர் துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

லக்னோ போலீஸ் அதிகாரி கலாநிதி நைதானி, ‘எங்கள் காவலர்கள் சந்தேகத்துக்குரிய ஒரு காருக்கு அருகில் சென்றுள்ளனர். அப்போது அந்த காரின் ஓட்டுநர் எங்களிடமிருந்து தப்பிக்கப் பார்த்தார். இதனால் தான் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியிருந்தது’ என்று கூறியுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.