மானிய மற்றும் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு 

0
86
LPG Gas Price Reduced-News4 Tamil Online Tamil News Website Live
LPG Gas Price Reduced-News4 Tamil Online Tamil News Website Live

மானிய மற்றும் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

மானியமில்லாமல் மக்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர் விலை ரூபாய்.133 அளவிற்கு குறைக்கபடுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று நள்ளிரவு முதல் டெல்லியில் விலை குறைக்கப்பட்ட மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ. 809.50 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது  சிலிண்டருக்கு ரூ.507.42 என்று இருந்து வருகிறது. இந்நிலையில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுவான எல்பிஜி சிலிண்டர் விலை ரூபாய்.6.52 குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 நள்ளிரவு முதல் இந்த விலை அமலுக்கு வருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து மானிய விலை சிலிண்டர் தலை நகர் டெல்லியில் ரூ.500.90க்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் 6 மாதங்களாக தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டு கொண்டே வந்தது. இந்த தொடர்ச்சியான விலை உயர்வுகளால் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.14.13 ஏற்றம் கண்டது. கடைசியாக நவம்பர் மாதம்  1ம் தேதி சமையல் எரிவாயுவான எல்பிஜி விலை சிலிண்டருக்கு ரூ.2.94 உயர்த்தப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் மானிய விலை சிலிண்டரைப் பொறுத்தவரை மானியங்கள் நேரடியாக பயனாளர்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுகிறது, இது ஒவ்வொரு மாதமும் மாற்றமடையும், ஏனெனில் சர்வதேச சந்தைக்கேற்ப கச்சா எண்ணையின் விலை ஏற்றங்களை வைத்து சமையல் எரிவாயுவின் விலையும் மாறும்,அதற்கேற்றவாறு அரசு வழங்கும் மானியமும் மாறும். உலக அளவில் கச்சா எண்ணையின் விலை அதிகரிக்கும் போது அரசும் மானியத்தை அதிகரிக்கும், உலக அளவில் இதன் விலைகள் குறையும் போது மானியத் தொகை குறையும்.

மானிய மற்றும் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு -News4 Tamil Online Tamil News Website Live
LPG Gas Price Reduced-News4 Tamil Online Tamil News Website Live

இந்திய அரசின் வரி விதிகளின் படி சமையல் எரிவாயுவான எல்பிஜி மீதான ஜிஎஸ்டி வரி அதன் சந்தை விலையில் தான் கணக்கிடப்படும். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ஒரு பகுதியை அரசு மானியமாக வழங்க முடிவெடுத்தாலும் அதற்கான ஜிஎஸ்டி வரி அதன் சந்தை விலைகளிலேயே செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த விலைகுறைப்பின் படி மானிய விலையில் சிலிண்டர் வாங்குபவர்கள் கணக்கில் மானியத் தொகை டிசம்பர் மாதம் முதல் சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.308.60 என செலுத்தப்படும். இதுவே நவம்பர் மாதத்தில் ரூ.433.66 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளதால், அதற்கேற்றவாறு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன. தொடர்ந்து 6 மாதங்களாக உயர்ந்து வந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.

மேலும் இதுமட்டுமில்லாமல் கடந்த சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலையும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here