திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மைய்யத்தின் நிலைப்பாடு பற்றி கமலஹாசன் விளக்கம்

0
129
Kamal Hassan Gives Explanation About Thiruvarur By Election-News4 Tamil Online Tamil News Website
Kamal Hassan Gives Explanation About Thiruvarur By Election-News4 Tamil Online Tamil News Website

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மைய்யத்தின் நிலைப்பாடு பற்றி கமலஹாசன் விளக்கம்

நடைபெறவுள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுவர்களா இல்லையா என்பது பற்றி அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அவரது தொகுதியான திருவாரூரில் வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே திருவாரூரில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் பார்க்கபடுகிறது.

இந்நிலையில் அதிமுக,திமுக மற்றும் அமமுக போன்ற கட்சிகள் தங்கள் கட்சி சார்பாக திருவாரூர் இடைத்தேர்தலில் நிற்கவிருக்கும் வேட்பாளர்களை இன்று அறிவிக்க போகின்றன. மேலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சி சாகுல் ஹமீது  என்பவரை ஏற்கனவே வேட்பாளரை அறிவித்து விட்டது

சமீபத்தில் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக இந்த திருவாரூர் இடைதேர்தலில் போட்டியிடுவார்களா மாட்டார்களா என்பது பற்றி எதையும் தெரிவிக்காமல் இருந்தார். .

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இந்த இடைதேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுவது குறித்து இன்னும் இரண்டு தினங்களில் கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here