மக்கள் நீதி மய்யம்-காங்கிரஸ் கூட்டணி அமையும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

0
59
kamal haasan ready to join alliance with congress if they break alliance with dmk
kamal haasan ready to join alliance with congress if they break alliance with dmk

மக்கள் நீதி மய்யம்-காங்கிரஸ் கூட்டணி அமையும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

மக்கள் நீதி மய்யம்-காங்கிரஸ் கூட்டணி அமையும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி : நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமலஹாசன்.

kamal haasan ready to join alliance with congress if they break alliance with dmk
kamal haasan ready to join alliance with congress if they break alliance with dmk

தமிழக அரசியல் சாதக நிலையை ஏற்கனவே இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ள முயற்சித்து வருகின்றன.அந்த வகையில் தற்போது கட்சியை ஆரம்பித்த கமலஹாசனும் தமிழக மக்களை சந்தித்து வருகிறார்.

தொடர்ந்து ஆளுங்கட்சியான அதிமுக அரசையும், அமைச்சர்களையும் விமர்சிக்கும் விதமாக தனது பேச்சு மற்றும் பேட்டிகளை அமைத்து வந்த கமல்ஹாசன் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக ஆளுங்கட்சியினர் விமர்சித்து வந்தனர்.தேர்தலில் திமுகவுடன் கமல் கூட்டணி வைப்பார் என்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

இந்நிலையில் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் திமுகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.திமுக மட்டுமில்லாமல் அதிமுக மற்றும் பாஜக உடனும் கூட்டணி இல்லை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளார்.

அதே நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உடையும் என்றும் அப்படி அந்த கூட்டணி உடையும் நேரத்தில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்றும் குறிபிட்டுள்ளார்.

ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணிக்கு தயார் என்று கூறிய நிலையில் நடிகர் கமலஹாசனும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயார் என்று கூறியது திமுகவிற்கு பலத்த எதிர்ப்பு உருவாகி வருவதை காட்டுகிறது.

மேலும் அவர் தனது பேட்டியில் மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது அதனால் அனைத்து கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை.ஆனால் தமிழக அரசு, ‘நடிகர்களை அழைக்காதீர்கள், அரசியல் பேச அனுமதிக்காதீர்கள்’ என கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புகிறது. அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுகிறார் என்றும் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here