Indian Railway Introduced New Application to Check Waiting List-News4 Tamil Online Tamil News Website
Indian Railway Introduced New Application to Check Waiting List-News4 Tamil Online Tamil News Website

பயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது

நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்பவர்கள்பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் தேர்ந்தெடுப்பர்கள். இது பயணத்திற்கு வசதியாக இருந்தாலும் டிக்கெட் கிடைப்பது என்பது மிகவும் சிரமமானது.அதுவும் பதிவு செய்த பின்பு காத்திருப்பு பட்டியலில் வந்துவிட்டால் அது உறுதியாகுமா அல்லது ஆகாதா என்பது ரயில் பயணம் செல்லும் பெரும்பாலோனோருக்கு பெரும் தொல்லையாகவும்,மன உளைச்சலைக் கொடுப்பதாகவும் உள்ளது.

இந்நிலையில் தான் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் உள்ளதா இல்லையா என்ற மன உளைச்சலிலிருந்து விடுபட இந்திய இரயில்வே நிர்வாகம் புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது

இந்திய இரயில்வே நிர்வாகத்தால் HHTs என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய டேப்லட் செயலி டிக்கெட் முன்பதிவு பற்றிய விவரங்களை உடனுக்குடன் அறிய உதவுகிறது. இந்திய இரயில்வே நிர்வாகம் இந்த செயலி பொருத்தப்பட்ட டேப்லெட்டை டிடிஇ-களிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரயில் எங்கே இருக்கிறது மற்றும் டிக்கெட் உறுதியானதா இல்லையா என்ற வெயிட்டிங் லிஸ்ட் குறித்தும் உடனுக்குடன் சுலபமாக கண்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி இந்திய ரயில்வே துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது, “முதலில் 550 HHTs செயலியுள்ள டேப்லெட்டை இந்தியா முழுவதும் உள்ள டிடிஇ-க்களிடம் கொடுப்பதாகவும் பிறகு இந்த செயலியின் பயன்பாடு பற்றிய முழுமையான தகவல்களை சேகரித்த பிறகு இதனை முழுமையாக செயல்படுத்துவது பற்றிய முடிவு எடுக்கப்படும்” என்று கூறினர். டிக்கெட் முன்பதிவு பற்றி அறிந்து கொள்ள பயன்படும் இந்த சேவை முதன் முதலில் சதாப்தி மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பரிசோதனை செய்து பார்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய இரயில்வே அறிமுகபடுத்தும் இந்த செயலியின் பயன்கள்

  • ரயில் பயணத்தின்போது RAC மற்றும்காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனடியாக டிக்கெட் பதிவு செய்து தருவதற்குபயனுள்ளதாக இருக்கும்.
  • முன்பதிவுசெய்துவிட்டு வராமல் இருப்பவர்களால் காலியாக இருக்கும் இருக்கைகள் பற்றிய விவரங்களைதெரியப்படுத்தும்.
  • ரயில்நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பிய பிறகு, TTE-க்களிடம் இருக்கும் இந்த செயலி மூலம் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே எந்த இருக்கைகள் காலியாக இருக்கிறது என்ற தகவலை கண்டறிந்து வெயிட்டிங்கில்உள்ள பயணிகளுக்கு பதிவு செய்து கொடுப்பார்கள்.
  • இந்த செயலி, ரயிலில் பயணம் செய்பவர்களுக்கும், காத்திருப்பு பட்டியல் அல்லது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் சிறந்தவகையில் கைக்கொடுக்கும்.
  • ஒருவேளை பயணிகள்தங்களின் இருக்கைகளை அல்லது படுக்கைகளை மாற்ற வேண்டுமென்றால், அதாவது கீழ் பர்த் இருப்பவர்கள் மேல் பர்த்வேண்டுமென்றால் அதை மாற்றிக் கொடுக்கவும் இந்த செயலி பயன்படும்.

இதுவரை இந்திய இரயில்வேயில் பேப்பர் திட்டத்தில் இருக்கும் இந்த சேவை டிஜிட்டல் மயமாக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம், TTE-களுக்கு வேலை எளிமையாவதுடன், ரயில் பயணம் செய்யும் பயணிகளும் வெகு நேரம் காத்திருக்காமல் விரைவில் பயனடையலாம்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டுசெய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்பசெய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்திஇணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.