Indian Army Shot Pakistan Terrorist Involved in Pulwama Attack - News4Tamil Online Tamil News Live Today
Indian Army Shot Pakistan Terrorist Involved in Pulwama Attack - News4Tamil Online Tamil News Live Today

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய இராணுவம்

கடந்த வியாழக்கிழமை அன்று புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, தீவிரவாதிகளை பழிதீர்க்க காத்து கொண்டிருந்த இந்திய ராணுவத்திற்கு புல்வாமா மாவட்டம் பிங்லான் கிராமத்தில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த உதவி செய்தவர்களாக கூட இருக்கலாம் என்ற ரகசியத் தகவல் கிடைத்துள்ளது

இந்நிலையில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கூறிய பிங்லான் கிராமத்தை இந்திய ராணுவமும் காஷ்மீர் மாநில போலீஸாரும் சுற்றி வளைத்துள்ளனர். இதையறிந்த தீவிரவாதிகள் இராணுவத்தினர் மீதும் காவல் துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்வாறு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் பாதுகாப்பு படையின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பின் முக்கிய கமாண்டரும், மசூத் ஆசாரின் நெருங்கிய கூட்டாளியுமான கம்ரான் என தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற தற்கொலைப்படை தாக்குதல் திட்டத்தை வடிவமைப்பதிலும், அதனை துல்லயமாக அரங்கேற்றுவதிலும் கொல்லப்பட்ட கம்ரான் மிக முக்கியமான நபர் ஆவார். மேலும் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியது மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு எதிரான இந்த சதி திட்டத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டதும் கொல்லப்பட்ட கம்ரான் தான் என தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலின்போது, தீவிரவாதிகள் தரப்பில் மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலில் சுட்டுகொல்லப்பட்ட அவரின் பெயர் ஹிலால் அகமது எனவும் தெரிய வந்துள்ளது.

இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தி 40 கொல்லப்பட காரணமாக இருந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புக்கு எதிரான இந்த சண்டையில் இந்திய இராணுவம் தரப்பில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.