அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்

0
197
us-s-400-russia-india-News4 Tamil
us-s-400-russia-india-News4 Tamil

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்!

அமெரிக்காவின் எதிர்ப்பையும்  மீறி இன்று எஸ் 400 ரக ஏவுகணை குறித்து இந்தியா -ரஷ்யா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அதனைப் புறக்கணித்து, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் இன்று கையெழுத்திட்டுள்ளனர்.

India signs S-400 missile deal with Russia
India signs S-400 missile deal with Russia

தரையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.

 உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவுடன் மிக நீண்ட காலமாக நெருங்கிய நட்பை இந்தியா கடைபிடித்து வருகிறது. இந்நிலையில இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் 19–வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது.

இம்மாநாட்டில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இரு நாடுகளுக்கிடையேயான எஸ்-400 ரக ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நேற்று நடந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். குறிப்பாக அரசியல், ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதாரம், எரிசக்தி, தொழில் துறை, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றன.

இதைப்போல இருநாட்டு உயர்மட்டக்குழுக்களுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா, ரஷியா குழுக்களுக்கு முறையே பிரதமர் மோடியும், புதினும் தலைமை தாங்கினர்.

இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரம் கோடி) மதிப்பில் அதிநவீன எஸ்–400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 250 கி.மீ. தொலைவில் வரும் போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கவல்ல இந்த ஏவுகணைகளின் திறனை 400 கி.மீ. தொலைவு வரை அதிகரிக்க முடியும்.

இந்த ஒப்பந்தம் நிறைவேறியதை தொடர்ந்து 2020–ம் ஆண்டுக்குள் இந்த ஏவுகணைகளை ரஷியா, இந்தியாவுக்கு வழங்கும்.

S-400 Missile
S-400 Missile

ரஷ்ய அரசின் ராணுவ தளவாட நிறுவனமான அல்மாஸ்-ஆன்டே தயாரிக்கும் இந்த ஏவுகணையை, ரஷ்யாவுக்கு எதிரான நாட்டோ நாடுகள் எஸ்ஏ-21 என அழைக்கின்றன. நீண்ட தொலைவு சென்று தாக்கும் என்பதால், வான்பகுதியை ஆக்கிரமிக்க விடாமலும், தரைப்பகுதியில் எதிரி முன்னேறாமலும் தடுக்கும்,

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா, வான் எல்லையை பாதுகாக்க எஸ்-400 ஏவுகணைகளையே நிறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் அதன் போக்கையே மாற்றும் தன்மை உடையது எஸ்.400 என வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

ரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை வாங்கினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க விடுத்த மிரட்டலையும் பொருட்படுத்தாமல், ரஷியாவுடன் இந்த ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எஸ்–400 ஏவுகணை வாங்குவது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ரஷ்யாவுடன் எவ்வித வர்த்தக உறவையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என நட்பு நாடுகளை வலியுறுத்தி உள்ளோம். இதை மீறும் நாடுகள் மீது புதிய சட்டத்தின்படி பொருளாதாரத் தடை விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் ஏவுகணையை வாங்க இந்தியா உறுதியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here