ஈரானிடமிருந்து இந்திய ரூபாய் செலுத்தி கச்சா எண்ணெய் வாங்க புதிய ஒப்பந்தம்

0
93
India Sign Agreement with Iran to Pay Crude Oil Bill in Rupee-News4 Tamil Online Tamil News Website
India Sign Agreement with Iran to Pay Crude Oil Bill in Rupee-News4 Tamil Online Tamil News Website

ஈரானிடமிருந்து இந்திய ரூபாய் செலுத்தி கச்சா எண்ணெய் வாங்க புதிய ஒப்பந்தம்

இந்திய ரூபாயை செலுத்தி ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தானது.

ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதும் அந்த நாட்டின் மீது பல்வேறு வகையான பொருளாதார தடைகளை விதிக்க ஆரம்பித்தது அமெரிக்கா.அந்த வகையில் ஈரானிலிருந்து மற்ற நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் 4 ஆம் தேதிக்குள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த மிரட்டல் அறிவிப்பை கண்டு கொள்ளாத இந்தியா தொடர்ந்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்ய தயாராக இருந்தது. இந்நிலையில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு அமெரிக்காவின் நட்பு நாடுகள் தொடர்ந்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்யலாம் என அமெரிக்கா அறிவித்தது.இவ்வாறு அறிவித்ததோடு நிற்காமல் அதனுடன் நிறைய நிபந்தனைகளையும் விதித்தது. மேலும் இதைபற்றிய தகவல்களை அறிய பின்வரும் செய்தியை படியுங்கள்.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவிற்கு தற்கால அனுமதி

இந்நிலையில் ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை அமெரிக்கா டாலரில் செலுத்தாமல் இந்திய ரூபாயாகவே செலுத்த இந்தியா மற்றும் ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையில் பாதி அளவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்தும் மீதி தொகையை இந்திய ரூபாயாகவும் செலுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்த மீதி தொகையை ஈரான் தேசிய கச்சா எண்ணெய் கழகத்தின் யூகோ வங்கி கணக்கில் செலுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை செலுத்த முடிவு செய்திருப்பதால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here