ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி

0
70
India Recovered by Pujara’s century in India vs Australia Test Series -News4 Tamil Online Tamil News
India Recovered by Pujara’s century in India vs Australia Test Series -News4 Tamil Online Tamil News

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்திய அணி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இன்று துவங்கியது. 1947 ஆம் ஆண்டிலிருந்து பலமுறை  இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்தாலும் ஒருதடவை கூட அங்கு தொடரில் வெற்றி பெற்றதில்லை என்ற குறை நீண்ட நாட்களாகவே உள்ளது. இந்நிலையில் இந்த முறை ஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய அணி பலம் குறைந்த ஆஸ்திரேலிய அணியை வெல்லும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இன்று ஆரம்பித்த போட்டியில் டாஸில் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக தேர்ந்தெடுத்தது. இந்த போட்டியில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 12 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து விஹாரி நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்ய தேர்ந்தெடுத்த பின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் விஜய் என இருவரும்  களமிறங்கினர்கள்.

போட்டி ஆரம்பித்த இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரராக இறங்கிய ராகுல் 2 ரன் மட்டுமே பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். பலம் குறைந்தது என்று எண்ணிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தொடர்ந்து ஆட்டமிழந்தார்கள்.

அடுத்தடுத்து விளையாட வந்த முரளி விஜய் 11 ரன்களும், இந்திய கேப்டன் விராட் கோலி 3 ரன்களும், துணைக் கேப்டன் ரஹானே 13 ரன்களும் பெற்ற நிலையில் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து  பெவிலியன் திரும்பினார்கள்.இந்த முறையாவது வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் என இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய அணி உணவு இடைவேளைக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை மட்டுமே  எடுத்திருந்தது. தற்போது வரை ரோஹித் ஷர்மா 15 ரன்களுடனும், புஜாரா 11 ரன்களுடனும் களத்தில் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

India Recovered by Pujara’s century in India vs Australia Test Series
India Recovered by Pujara’s century in India vs Australia Test Series

இந்த டெஸ்ட் துவங்குவதற்கு முன்பே இவ்வாறு பேட்டிங்கில் தடுமாறும் இந்திய அணியை ஆஸ்திரேலிய பத்திரிகை பயப்படும் கிரிக்கெட் மட்டைகள் என்று விமர்சித்திருந்தது.

இந்திய அணி மதிய உணவு இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை பெற்றிருந்தது. அடுத்து தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது.

இவ்வாறு நன்றாக விளையாடும் முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே குறைவான ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா 37 ரன்களும், ரிஷப் பண்ட் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவேளையின் போது புஜாரா நிதானமாக ஆடி 46 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

இவ்வாறு ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடிய புஜாராவுடன் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியா ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டும் என்று அனைவராலும் எதிர்பர்க்கபட்டது.

அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே பொறுப்பை உணர்ந்த புஜாரா நிதானமாக ஆடி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தது மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை புஜாரா பூர்த்தி செய்தார். 123 ரன்களை அடித்துவிட்டு புஜாரா ஆட்டமிழந்தபோது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்திருந்தது. 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த கொண்டிருந்த இந்திய அணி புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் ஸ்டார், கம்மின்ஸ், ஹேசல்வுட், லயன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்கள்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here