ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவிற்கு தற்கால அனுமதி

0
132
India Got Exemption to Import Crude Oil from Iran
India Got Exemption to Import Crude Oil from Iran

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவிற்கு தற்கால அனுமதி

India Got Exemption to Import Crude Oil from Iran: அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தற்காலிகமாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது பொருளாதாரத் தடை

அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டில் எண்ணெய் தொடர்பான வர்த்தகம் மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா கூறியிருந்தது.

India Got Exemption to Import Crude Oil from Iran-News4 Tamil Online Tamil News
India Got Exemption to Import Crude Oil from Iran-News4 Tamil Online Tamil News

இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு ஈரானில் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் வாங்க தடை ஏதும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த எட்டு நாடுகளில் நான்கு நாடுகளின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருகின்ற திங்கள் கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

அதற்கு பிறகு அமெரிக்கா ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த மற்ற நாடுகள் தொடர்ந்து ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து வந்தன. இந்நிலையில் அமெரிக்கா ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா மிரட்டியபோதிலும், நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

ஆனால் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு எந்தெந்த நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறதோ அந்த நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்திருந்தது. இந்தநிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு தற்காலிகமாக அமெரிக்க விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

India Got Exemption to Import Crude Oil from Iran-News4 Tamil
India Got Exemption to Import Crude Oil from Iran-News4 Tamil

மேலும்  இதுகுறித்து  விரைவில் அமெரிக்க வெளியுறவுத்துறை  அமைச்சர் மைக் பாம்பியோ இதனை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தெரிகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் ‘‘ஈரான் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் ஈட்டும் பணத்தை தீவிரவாதத்துக்கு செலவிட்டு வருகிறது என நாங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறோம். அமெரிக்காவின் இந்த நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அதனால் அந்த நாடு நிதி குவிப்பதை தடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. ஈரானிடம் இருந்து நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அறிவித்து இருந்தோம்.

எனினும் தற்போதுள்ள சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து 7 நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாக அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளும் விரைவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு இதனை தொடர முடியாது என தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் இருந்து அதிகஅளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனா உள்ளது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளபோதிலும், சீனாவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக சீனாவுடன், அமெரிக்கா தரப்பில் பேச்சவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் பொருளாதாரத் தடை – பண பரிவர்த்தனை

தற்போது தற்காலிக தடை விலக்கு பெற்றிருக்கும் நாடுகள், தாங்கள் இறக்குமதி செய்யும் பெட்ரோல் பொருட்களிற்கான பணத்தினை நேரடியாக ஈரானிற்கு அனுப்ப முடியாது. அந்த பணத்தினை ஈஸ்க்ரோவ் கணக்குகள் ( Escrow Accounts ) மூலமாக உள்நாட்டுப் பணமாக தான் போட வேண்டும். இவ்வாறு கச்சா எண்ணெய் விற்பனை மூலம் பெறப்படும் அந்த பணத்தினை வைத்துக் கொண்டு, ஈரான் பொருளாதார தடை விதிக்கப்படாத பொருட்கள், உணவுப் பொருட்கள், மற்றும் மருந்துகள் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும்,வேறு எந்த தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here