உலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம்

0
146
World Banks ease of doing business ranking: India jumps 23 notches to 77th place, improves in 6 out of 10 indices

உலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம்

India Gets 77th Place Improves in 6 out of 10 Indices in World Banks Ease of Doing Business Ranking Report

உலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் (Doing Business Report) இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77 வது இடத்தை பிடித்துள்ளது. இது 10 குறியீட்டு இலக்கங்களில் 6 ல் முன்னேற்றம்  அடைய உதவியுள்ளது.

வாராக் கடன்,வரி விதிப்பு, திவால் சட்டம், ஜிஎஸ்டி போன்றவற்றில் புதியதாக பதவியேற்ற மோடி தலைமையிலான அரசு சீர்திருத்தங்கள் செய்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இந்த நிலையை அடைந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு இந்தியா 100 வது இடத்தில் இருந்தது.

வரும் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அரசை எதிர்த்து எதிர் கட்சிகளால் வைக்கப்படும் விமர்சனங்களை சமாளிக்கும் வகையில் இந்த தர மதிப்பீடு உள்ளது.

India Gets 77th Place Improves in 6 out of 10 Indices in World Banks Ease of Doing Business Ranking Report-News4 Tamil
India Gets 77th Place Improves in 6 out of 10 Indices in World Banks Ease of Doing Business Ranking Report-News4 Tamil

இந்த ஆண்டிற்கான எளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் (Doing Business 2019 Report),நாட்டில் தொழில் தொடங்குவது மற்றும் நடத்துவது போன்ற 10 காரணிகளில் 6 இல் இந்தியாவின் தர மதிப்பீடு முன்னேறியுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

சுலபமாக தொழில் தொடங்குவது,மின் இணைப்பு பெறுவது, கட்டுமான அனுமதி பெறுவது, வரி செலுத்துவது,கடன் பெறுவது, எல்லைகளுக்கிடையேயான வர்த்தகத்தை எளிதாக்கியது, ஒப்பந்தங்களை செயல்படுத்துவது மற்றும் திவால் சட்டம் போன்றவை இந்த காரணிகளில் அடங்கும்.

190 நாடுகள் உள்ள இந்த பட்டியலில் 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பதவியேற்கும் நிலையில் இந்தியா 142 வது இடத்தில் இருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்த 131 வது இடத்திலிருந்து தற்போது 100 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

190 நாடுகள் உள்ள எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகள் பட்டியலில் நியுசிலாந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்து சிங்கப்பூர்,டென்மார்க் மற்றும் ஹாங்காங் உள்ளது. அமெரிக்கா 8 வது இடத்திலும்,சீனா 46 வது இடத்திலும்,நமக்கு அண்டை நாடான பாகிஸ்தான் 136 வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவை மிகச் சிறந்த முன்னேற்றங்களைச் செய்வதற்கான முதல் 10 பொருளாதாரங்களுக்குள் உலக வங்கி வைத்துள்ளது. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இரண்டு பொருளாதாரங்களான சீனா மற்றும் இந்தியா, ஈர்க்கக்கூடிய சீர்திருத்த செயல்திட்டங்களை நிரூபித்ததாகவும்,இந்தியா வர்த்தக நடவடிக்கைகளை சீர்செய்வதில் கவனம் செலுத்தியது எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா செயல்படுத்திய சீர்திருத்தங்கள்

இந்தியாவில் பல பயன்பாட்டு வடிவங்களை, ஒரு பொது ஒருங்கிணைப்பு வடிவத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் தொழில் தொடங்குவது எளிதாகிறது. மேலும் மதிப்பு கூட்டு வரிக்கு ( value-added tax ) பதிலாக இந்தியா முழுமையையும் ஒரே மாதிரியான பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை ( GST ) செயல்படுத்தியது மற்றும் இதை ஆரம்பிப்பதை வேகமாகவும்,எளிதாகவும் மாற்றியமைத்தது.நாடு முழுமையும் பல தரப்பட்ட மாநில மற்றும் மத்திய மறைமுக வரிகளை செலுத்துவதற்கு பதிலாக  “ஒரே நாடு ஒரே வரி” என்ற நோக்கில் ஒற்றை மறைமுக வரியான “சரக்கு மற்றும் சேவை வரியின் ( GST )“மூலம் செலுத்துவதை இந்தியா செயல்படுத்தியது. நிறுவனதின் வருமான வரி விகிதம் மற்றும் முதலாளியால் வழங்கப்படும் ஊழியர்களின் வைப்பு நிதித் திட்ட விகிதத்தை குறைத்தது மூலம் வரிகளுக்கான செலவை இந்திய அரசு குறைத்தது எனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

India Gets 77th Place Improves in 6 out of 10 Indices in World Banks Ease of Doing Business Ranking Report  
India Gets 77th Place Improves in 6 out of 10 Indices in World Banks Ease of Doing Business Ranking Report

நன்கு வடிவமைக்கப்பட்ட நொடித்துப் போதல் மற்றும் திவால் சட்டம்வாரா கடன் மீட்புக்கான ஒரு முக்கிய செயல்பாடு என்று கூறி, அது இந்தியாவில் கடன் மீட்பு நீதிமன்றங்களை நிறுவி “வாரா கடன்களை 28 சதவிகிதம் குறைத்தது மற்றும் பெரிய கடன்களின் வட்டி விகிதங்களை குறைத்தது, கடன் மீட்புக்கான வழக்குகளை விரைவாக தீர்க்க கூறி கடன் செலவுகளை குறைத்தது.

கொள்கலன் வாகனங்களின் மின்னணு சீல் செய்தல், துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் கையொப்பங்களுடன் கூடிய ஆதார ஆவணங்களை இணையம் வழியாக வழங்குவதை அனுமதித்தல் உட்பட பல்வேறு முயற்சிகளால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நேரத்தையும் செலவுகளையும் இந்தியா குறைத்தது.

கட்டட அனுமதி பெறும் வழிமுறைகளை இந்தியா இன்னும் சீராக்கி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது மற்றும் இது வேகமாகவும்,செலவு குறைவாகவும் கட்டிட அனுமதியை பெற உதவியது எனவும் குறிபிட்டுள்ளது.மேலும் இது பத்து ஆண்டுகளுக்கான பொறுப்பு மற்றும் காப்பீடு அறிமுகபடுத்துவத்தின் மூலம் கட்டிடத்தின் தரம் நிர்வகித்தலும் மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அரிய சாதனை என்கிறது  வர்த்தக அமைச்சகம்

இந்தியா எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான தரவரிசையில் 23 இடங்களைக் கைப்பற்றியதும் கடந்த ஆண்டு 30 இடங்கள் முன்னேறியதும் இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு அரிய சாதனையாகும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் 53 இடங்களும், 2014 ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளில் 65 இடங்களும் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

10 காரணிகளில் இந்தியாவின் தர மதிப்பீடு

உலக வங்கி 190 நாடுகளில் தொழில் தொடங்குவது,கட்டிட அனுமதி, மின்சாரம் பெறுதல், கடன் பெறுதல், வரி செலுத்துதல், எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்தல், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல், நொடிப்பை தீர்ப்பது உட்பட, 10 காரணிகளைக் கொண்டு தரவரிசைப்படுத்துகிறது.இந்தியா இந்த 10 குறியீடுகளில், 6 இல் நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது.

உலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம்
India Gets 77th Place Improves in 6 out of 10 Indices in World Banks Ease of Doing Business Ranking Report-News4 Tamil

முக்கியமாக கட்டிட அனுமதி, எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்தல் போன்றவற்றில் அதிக இடங்கள் முன்னேறியுள்ளது. கட்டுமான அனுமதியில் 129 இடங்களும், எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்வதில் 66 இடங்களும்,தொழில் தொடங்குவதில் 19 இடங்களும் மற்றும் கடன் பெறுவதில் 7 இடங்களும் முன்னேறியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here