Income Tax Return Filing Deadline Extended : தொழில் நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

0
42
Income Tax Return Filing Deadline in India
Income Tax Return Filing Deadline in India

தொழில் நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அக்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது 

Income Tax Return Filing Deadline
Income Tax Return Filing Deadline

Income Tax Return Filing Deadline

Income Tax Return Filing Deadline: வருமானவரி தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் 15 நாட்கள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் 15 நாட்கள் அதாவது அக்டோபர் 15 வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில் துறையினரும் ஜூலை மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றம் நிகர வரிகளை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டிஆர்-3பி (GST R-3B)என்னும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான நெருக்கடியில் உள்ளனர்.

இந்தநிலையில், 2017-18 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி முடிவடைவதாக இருந்த கடைசி தேதி, அக்டோபர் 15ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு ஏற்கனவே கூறியபடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT Return Filing Deadline
IT Return Filing Deadline

இதற்கு முன் 2017-18 நிதியாண்டிற்கான தனிநபர் மற்றும் மாத ஊதியம் பெறுவோரின் வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர் காலவரையறை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here