Heir Politics Problems in Vijayakanths DMDK-News4 Tamil Online Tamil News Website
Heir Politics Problems in Vijayakanths DMDK-News4 Tamil Online Tamil News Website

வாரிசு அரசியலை குறை கூறி வந்த தேமுதிகவிற்குள்ளும் வாரிசு அரசியல் பிரச்சனையா?

நடிகர்  விஜயகாந்த்  அவர்களால் தொடங்கப்பட்ட தேமுதிக ஆரம்ப காலகட்டத்தில் தேர்தலில் தனித்து நின்றது மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் நெடுங்காலமாக நிலவி வரும் வாரிசு அரசியல் மற்றும் ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்து ஓரளவு மக்கள் செல்வாக்கை பெற்றது. இதையடுத்து 2006, 2011ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல்கள் மூலம் தேமுதிக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. ஆனால் அடுத்து நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்காக திமுக மற்றும் பாஜக என மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு முடிவாக மதிமுக தலைவர் வைகோ மற்றும் திருமாவளவன் அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து படுதோல்வியை தழுவியது.

இதையடுத்து தமிழக அரசியலிலிருந்து விலகியே இருந்த நடிகர் விஜயகாந்திற்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்பட்டு வந்தது.இதனால் பெரும்பாலும் அரசியல் மேடைகளில் பேசுவதை தவிர்த்தே வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்த விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு கட்சிக்கான இணையதளத்தை துவங்கி வைத்தார்.இதன் பிறகாவது அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார் என்று காத்திருந்த அவர் தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இரண்டாவது முறையாக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன் தேமுகவின் சார்பாக கட்சி நிகழ்சிகளில்பங்கெடுக்க ஆரம்பித்துள்ளார்.ஆரம்ப காலத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணஉதவிகளை வழங்கியது சாதரணமாக பார்க்க பட்டாலும் அடுத்து திருமண நிகழ்ச்சி மற்றும்தற்போது கிறிஸ்துமஸ் விழா போன்ற கட்சி சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்து கொள்வதுஅவரது அரசியல் நுழைவை உறுதிபடுத்துகிறது.இதற்கு முன்பே விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொருளாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிஇருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் வாரிசு அரசியலை எதிர்த்த தேமுதிகவிலேயே தற்போது வாரிசுஅரசியல் உருவாகியுள்ளது பெரும்பாலனவர்கள் மத்தியில் விமர்சனதிற்குள்ளாகியுள்ளது.மேலும்விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அவர்களின் அரசியல் ஈடுபாடு விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுக்கு பிடிக்கவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.