
பிரதமர் மோடியின் தமிழக வருகையை #GoBackModi என சமூக வலைதளங்களில் செய்த விமர்சனம் உலக அளவில் டிரண்டிங் ஆனது.
தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணியை துவக்கி வைக்க இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக மக்களும் எதிர்கட்சிகளும் செய்த விமர்சனங்கள் #GoBackModi என்ற ஹேஸ் டேக்கில் சமூக வலைதளங்களில் உலக அளவில் டிரண்டிங் ஆகி பிரபலமாகி வருகிறது.
தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டங்களோ சலுகையோ வழங்காமல் தமிழக மக்களை புறக்கணித்து வருகிறது என்று மத்திய அரசு மீது தமிழக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாற்றியுள்ளார்கள். இது மட்டுமல்லாமல் புயல்,மழை மற்றும் வெள்ளம போன்ற இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்பட்ட நேரங்களில் கூட இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் படி ஒரு மாநிலத்திற்கு வழங்க கூடிய உதவியை கூட இந்த பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை என்ற குற்றசாட்டும் வந்த வண்ணமே இருந்தது.
தமிழகத்தில் தொடர்ந்து பாஜகவிற்கான எதிர்ப்பு அலை உருவாகி வருவதை உணர்ந்தும் விரைவில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வருவதாலும் தமிழக மக்களின் ஆதரவை எப்படியாவது பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது பாஜக. இதை மனதில் வைத்து தான் கடந்த காங்கிரஸ் அரசில் மத்திய சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்த தமிழகத்தை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தான் பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். இந்நிலையில் தமிழக மக்கள் கஜா புயல் மற்றும் மழை போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிக்க பட்டிருந்த நேரத்தில் வராத பிரதமர் தற்போது அரசியல் லாபத்திற்காக மருத்துவமனையை திறந்து வைக்கவும், தங்களது கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும் தமிழகம் வந்துள்ளதாக எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற தலைப்பில் விமர்சித்து வருகின்றனர்.

இவ்வாறு விமர்சனம் செய்த பதிவுகள் #GoBackModi என்ற ஹேஸ் டேக்கில் உலக அளவில் டிரண்டிங் ஆகி வருகிறது.
மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்| காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.