facebook user account hacked in tamil-news4 tamil online tamil news breaking news
facebook user account hacked in tamil-news4 tamil online tamil news breaking news
ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்

Facebook User Account Hacked in Tamil : உலக அளவிலேயே இந்தியர்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தி வரும் நிலையில் பேஸ்புக் பயனாளிகளின் 5 கோடி கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது பேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் மேலாண்மை பிரிவு துணை தலைவர் கய் ரோசென் கூறுகையில், “பேஸ்புக் பயனாளர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்துள்ளோம். இதனால் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதுபோலவே, 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்

பேஸ்புக்கில் உள்ள சிறப்பம்சமான “View As” எனும் வசதி மூலம் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்த பாதுகாப்பு குறைபாட்டினை பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25-ம் தேதி மாலை கண்டறிந்தனர். இப்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் உள்ள இந்த “View As” வசதி, பேஸ்புக் கணக்கு பாஸ்வேர்டு பற்றிய தகவல்கள் கொண்டதாக உள்ளது. இதனால் இதனை மற்றவர்கள் பார்க்க வாய்ப்பிருந்துள்ளது.இதன் மூலம் போதுமான தொழில்நுட்ப அறிவை கொண்ட யார் வேண்டுமென்றாலும் மற்றொருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த முடியும்.இதனால் தற்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்து வருகிறோம். ஆனால், இதற்காக பயனாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை மாற்றத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதில் பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க்கின் பேஸ்புக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் திருட்டு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றுள்ளதாகவும்,இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளி கிழமையன்று நடந்த இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளிகள் மீண்டும் லாகின் (Log in) செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளிகளின் கணக்குகள் மீட்டமைக்கப்பட்டதாகவும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்படாத 40 மில்லியன் பயனாளர்களின் கணக்குகளும் மீட்டமைக்கப்பட்டதாகவும் ஃபேஸ்புக்கின் தயாரிப்பு நிர்வாக பிரிவின் துணைத்தலைவர் கை ரோசன் தெரிவித்துள்ளார்.

இதனால் வெள்ளியன்று ஃபேஸ்புக்கின் பங்குகள் 3 சதவீதம் வரை குறைந்தன.

ஃபேஸ்புக் கணக்கை மூலமாக கொண்டு பயன்பாட்டாளர்கள் புகுபதிகை (Sign In) செய்துள்ள ஏர்பின்பி மற்றும் டிண்டர் ஆகிய பிற சில முக்கிய தளங்களிலும் ஹாக்கர்கள் இதன்மூலம் ஊடுருவியிருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

யாரெல்லாம் இதனால் பாதிக்கப்பட்டனர்?

உலகின் எந்த பகுதியில் இந்த 50 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கவில்லை, இருந்த போதிலும் அயர்லாந்து தகவல் கட்டுப்பாட்டாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மீண்டும் லாக்கின் செய்ய வலியுறுத்தப்பட்ட பயன்பாட்டாளர்கள் தங்களது கடவுச்சொற்களை மாற்ற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் விசாரணையை தற்போது தொடங்கியுள்ளதால், இந்த கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறேதும் தகவல்கள் எடுக்கப்பட்டதா என்று கண்டறியவுள்ளோம். மேலும் இந்த தாக்குதலுக்கு யார் காரணம், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை” என ரோசன் தெரிவித்துள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.