Dr Anbumani Ramadoss Gives Guidance for TN Govt in Sterlite Case - News4 Tamil Online Tamil News Channel
Dr Anbumani Ramadoss Gives Guidance for TN Govt in Sterlite Case - News4 Tamil Online Tamil News Channel

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசிற்கு அன்புமணி ராமதாஸ் வழங்கிய ஆலோசனை

மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழக அரசு இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மனிதர்களைக் கொலை செய்கிறது. சுற்றுச்சூழலை சீர்குலைக்கிறது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களும், சாட்சியங்களும் இருக்கும்போதிலும், அவை அனைத்தையும் கடந்து ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்து கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து தமிழக அரசும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையும் தொடர்ந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.

இதன்மூலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்குப் பின்னடைவாகும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதல் அதனால் அமைக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் குழு வரை அனைத்தும் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாகவே செயல்பட்டன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்படவில்லை.

மாறாக, ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் நியாயப்படுத்தப்பட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஒருதலைப்பட்சமான அறிக்கையின் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அதைத் தான் உச்ச நீதிமன்றமும் இப்போது உறுதி செய்துள்ளது. எனினும், இது இடைக்கால உத்தரவு தான். வழக்கு விசாரணையின் முடிவில் தான் இறுதித் தீர்ப்பு வெளியாகும். இம்முடிவே இறுதித் தீர்ப்பாக வருவதற்கும் வாய்ப்புள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை. 

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் ஆலை மூடப்பட்டது வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, நீதிமன்றங்களையும், அரசையும் ஸ்டெர்லைட் ஆலை ஏமாற்றியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தித் திறன் கடந்த 2006 ஆம் ஆண்டில் தினமும் 900 டன் என்ற அளவிலிருந்து 1200 டன்னாக அதிகரிக்கப்பட்டது. இதற்குத் தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க ஆலை வளாகத்தில் 172.17 ஹெக்டேர் நிலம் தேவை. ஆலையிடம் 102 ஹெக்டேர் மட்டுமே நிலம் இருந்த நிலையில், போதுமான நிலம் இருப்பதாகக் கூறி தமிழக அரசை  ஏமாற்றியது.

சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க 43 ஹெக்டேருக்கு பசுமைவெளி உருவாக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த விதியை ஆலை மதிக்கவில்லை. 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் ஆலையில் புகைபோக்கி 123 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் புகைப்போக்கி வெறும் 60 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் மாசுபட்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பாமக ஏற்கெனவே கூறி வருவதைப்போல மத்திய அரசும், நீதிமன்றங்களும் இத்தகைய பிரச்சினைகளை தொழில் வளர்ச்சி என்ற கோணத்தில் தான் பார்க்கின்றன.

அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவருகிறது. தமிழ்நாட்டில் தாமிர ஆலைகளுக்கு அனுமதியில்லை என்று கொள்கை முடிவு எடுத்து, அதற்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது மட்டும் தான் இதற்கு ஒரே தீர்வு ஆகும். இதை நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்ளும்.எனவே, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை சில நாட்கள் நீட்டித்தோ அல்லது இதற்காக சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியோ தனிச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Dr Anbumani Ramadoss Gives Guidance for TN Govt in Sterlite Case