சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு

0
167
Doordarshan cameraman and two policemen was killed by naxals attack-News4 Tamil

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ளார். மேலும், அந்தத் தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில்  90 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவிருக்கிறது. நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நக்சல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதி தேர்தலின் முதல் கட்டத்தில் நடைபெறுகிறது.

நேற்று சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டிருந்த மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ” கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாவோயிஸ்ட் தாக்குதல் 150-இல் இருந்து 78-80-ஆக குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு
Doordarshan cameraman and two policemen was killed by naxals attack

இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக தூர்தர்ஷன் குழுவினர் தண்டேவாடா மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இன்று ஆரன்பூர் காட்டுப்பகுதி வழியாக அவர்கள் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசாரும் சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் மற்றும் ஆரன்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ருத்திர பிரதாப், கான்ஸ்டபிள் மங்கலு  உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் விரைந்துள்ளனர்.

இதேபோல கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, சத்தீஸ்கரில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப்-யைச் சேர்ந்த நான்கு படை வீரர்கள் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மற்றும் இரண்டு சி.ஆர்.பி.எப் படைவீரர்கள் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here