DMK Plan for Chennai Constituency-News4 Tamil Online Tamil News Channel
DMK Plan for Chennai Constituency-News4 Tamil Online Tamil News Channel

மக்களவை தேர்தலில் சென்னையை முழுவதும் கைப்பற்ற திட்டமிடும் திமுக அதிர்ச்சியில் அதிமுக

மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் சார்பாக இரு அணிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஆரம்பத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி மெகா கூட்டணி என்று அழைக்கபட்டாலும் அதன்பிறகு அதிமுகவின் முயற்சியில் எதிரும் புதிருமாக இருந்த பாமக மற்றும் தேமுதிக உட்பட பாஜக,தமாக போன்ற கட்சிகளுடன் இணைந்து திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இணையாக அதிமுகவும் பலமான கூட்டணி அமைத்து விட்டது.

கூட்டணி அமைத்ததில் இரு அணிகளும் சமபலத்தில் இருந்தாலும் மற்ற பகுதிகளை விட திமுகவிற்கு சென்னையில் தான் செல்வாக்கு அதிகம் என்பதை அனைவரும் ஏற்றுகொள்வர். அந்த வகையில் வேட்பாளர்கள் தேர்வையும் திமுக தலைவர் உன்னிப்பாக கவனித்து செய்து வருவதாக கூறப்படுகிறது.எக்காரணம் கொண்டும் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று கட்சியினருக்கு தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம்.

திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் தேர்தலை சந்திப்பதாலும்,RK நகர் இடைத்தேர்தலில் அடைந்த மோசமான தோல்வியாலும் இந்த முறை மிகவும் கவனமாக தலைமை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள 3 முக்கிய தொகுதிகளிலும் பிரபலமானவர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாம். அதில் மத்திய சென்னை தொகுதியில் மாறன் குடும்பத்தை சேர்ந்த தயாநிதி மாறன் அவர்களும், அதே போல தென் சென்னையில் தனது மகனையோ அல்லது எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களோ நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாம்.அதே போல வடசென்னையில் ஆற்காடு வீராசாமியின் மகனை நிறுத்த தந்தை திட்டமிட்டு வருகிறாராம்.

ஏற்கனவே பல தேர்தல்களில் சென்னையில் தனது பலத்தை திமுக நிரூபித்து உள்ளதால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று சென்னை திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து விடலாம் என்ற நம்பிக்கையில் திமுகவினர் உள்ளனர். மறுபுறம் பலமான கூட்டணி அமைத்திருந்தாலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவால் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால் பெருமளவு வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதால் அதிமுக தலைமை பெரும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.