DMK Leader MK Stalin Criticise BJP Govt Interim Budget 2019-2020-News4Tamil Online Tamil News Channel
DMK Leader MK Stalin Criticise BJP Govt Interim Budget 2019-2020-News4Tamil Online Tamil News Channel

மத்திய அரசு வெளியிட்டுள்ள இடைக்கால பட்ஜெட் உள்நோக்கம் கொண்டது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் பாஜக அரசு என்னவெல்லாம் அறிவிக்க போகிறது என்று அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்த பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள இந்தச் சூழ்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத சூழ்நிலையில், இடைக்கால நிதி அமைச்சராக செயல்பட்டு வரும் பியூஸ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கபட்டுள்ளது. 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும் போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, மக்களை ஆசை வார்த்தை கூறி திசைதிருப்பும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்றும், இதில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. மேலும் விவசாயிகளை கவர்ந்திழுத்து கரையேறி விடலாம் என்ற கனவுலகில் பாஜக உள்ளது. இதில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை போல் இருந்தாலும் அது உள்நோக்கம் கொண்டவையாகவே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறு சலுகைகள் கொண்ட பட்ஜெட் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நேரம் விவசாயிகளை கவரும் நோக்கமாக கொண்டுள்ளது. பேரணி நடத்திய போது விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி இல்லை என பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பாஜக ஆட்சியில் முதல் ஆண்டில் வருமான வரிச்சலுகையை அறிவித்து இருக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக வருமான வரிச்சலுகை அறிவிப்பை வெளியிடாத பாஜக அரசுக்கு இதை வெளியிட 4 ஆண்டுகள் ஆகி இருக்கிறது என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

DMK Leader MK Stalin Criticise BJP Govt Interim Budget 2019-2020