தினகரனுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போக திட்டமிடும் திமுக அதிமுக ரகசிய பேச்சுவார்த்தை

0
222
DMK and ADMK Secret Negotiation to Break TTV Dhinakaran AMMK-News4 Tamil Online Tamil News Website
DMK and ADMK Secret Negotiation to Break TTV Dhinakaran AMMK-News4 Tamil Online Tamil News Website

தினகரனுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போக திட்டமிடும் திமுக அதிமுக ரகசிய பேச்சுவார்த்தை

தினகரனின் அமமுகவில் உள்ள அவரது ஆதரவாளர்களை முற்றிலும் அதிமுகவிற்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறி வருகின்றனர்.இதே போல அடுத்த முதல்வர் கனவுடன் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினும் செந்தில் பாலாஜியை போல மேலும் ஒரு சிலரையாவது தினகரனிடமிருந்து பிரித்து அந்த அணியை வலிமையிழக்க செய்ய நினைக்கிறார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவினால் டி.டி.வி தினகரனுடன் இணைந்த 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இதனையடுத்து தகுதி நீக்கம்செய்யப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கின் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக வந்ததால் அவர்கள் மறுபடியும் அதிமுகவில் இணையலாம் என்ற தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும்,தினகரனின் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து மேலும் சிலரை தினகரனிடமிருந்து பிரிக்க திமுக மற்றும் அதிமுக சார்பாக ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்களுடன் சந்தித்தார்.அப்போது தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்க சொல்லி சசிகலா தினகரனுக்கு உத்தரவிட்டும் சம்பந்தபட்டவர்களுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லையாம்.அப்போது பணம் தருவதாக ஏற்று கொண்ட தினகரனும் இதுவரை அதைப்பற்றி எதுவுமே கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள்.

இந்நிலையில் தான் அதிமுக மற்றும் அமமுகவை இணைப்பதற்காக பாஜக சார்பாக முயற்சி செய்து வருவதாக தினகரன்ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் வெளிப்படையாக கூறியிருந்தார். இதன் பிறகு இரு கட்சிகளும் இணையும் என்று நம்பியிருந்தார்கள் டி.டி.வி ஆதரவாளர்கள். ஆனால், எக்காலத்திலும் திமுக மற்றும் அதிமுகவுடன் இணைய மாட்டேன் என தீவிரமாக கூறிவிட்டார் டி.டி.வி தினகரன். இதனால் ஏற்கெனவே பணம், பதவி சிக்கலில் இருந்த மற்ற 17 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்களும் கடும் அதிருப்திக்கு உள்ளாகிவிட்டனர். அதிருப்தியில் இருக்கும் அந்த 17 பேரில், 11 நபர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்த பேச்சு வார்த்தையில் தங்க தமிழ்செல்வனுக்கு வாரியத் தலைவர் பதவியும், அவருடன் அதிமுகவில்  இணையும் மற்றவர்களுக்கு, கட்சியில் நல்ல பொறுப்புகள் தருவதாகவும், இதற்கான முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ரகசிய தூதர் ஒருவர் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் பட்சத்தில் அவர்கள் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இவ்வாறு கட்சியை இணைக்காமல்  கட்சியில் இருக்கும் அனைவரும் அதிமுகவுக்கு வந்தால் பிறகு அமமுக என்ற கட்சியே இருக்காது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை டி.டி.வி.தினகரனை தவிர கட்சியில் உள்ள மற்றவர்கள் திரும்ப அதிமுகவிற்கு வரலாம் என முன்பே கூறிவிட்டார். 

அமமுகவை அதிமுகவில் இணைப்பதால் டி.டி.வி.தினகரன் அதிமுகவில் அதிகாரம்செய்யத் தொடங்கி விடுவார். அதனால் தினகரனை தவிர அவருடன் இருக்கும்  மற்றவர்களை அதிமுகவிற்கு இழுத்து வந்து விட்டால் தினகரன் தனிமைபடுத்தப்படுவார். மீண்டும் அவர் அதிமுகவுக்குள் நுழைவதற்கும் வழியே இல்லை. அதுமட்டுமில்லாமல்அவருக்கு அரசியல் எதிர்காலமே  இல்லாமல் போய் விடும். ஆகையால், டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள அவரது ஆதரவாளர்களை எப்படியாவது அதிமுகவிற்குள் இணைத்து விட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறுகிறார்கள்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here