GoBackRahul
GoBackRahul

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்த விமர்சனம் கலக்கத்தில் திமுக

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு,கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GoBackRahul மற்றும் #GoBackPappu போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் தமிழக மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இவ்வாறு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த பதிவுகள் டிவிட்டரில் தேசிய அளவில் டிரண்ட் ஆகி வருகிறது.

கடந்த காலங்களில் திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உலக அளவில் அவமான படும் அளவிற்கு ஊழல் ஆட்சியை நடத்திய காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து விட்டு கடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.காலங்காலமாக பதவியை அனுபவித்த காங்கிரஸ் கட்சியால் இந்த படு தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் எவ்வாறவது வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த காலங்களில் அரசு திட்டங்களை நிறைவேற்ற ஒரு பிரதமராக நரேந்திர மோடி தமிழகம் வரும் போது கூட அவருக்கு எதிரான விமர்சனங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கொண்டு காங்கிரஸ் கட்சி பரப்பி வந்தது.மோடிக்கு எதிராக கருத்துக்களை பரப்ப நிறைய இடங்களில் பணம் கொடுத்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை நியமித்துள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அவர்கள் ஆரம்பித்ததை தற்போது தமிழக மக்களும் அவர்களுக்கு எதிராகவே விமர்சனம் செய்து வருகின்றனர்.கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த துரோகங்களை எல்லாம் மறந்து சாதாரணமாக ஆளுங்கட்சிக்கு எதிரான உருவாகும் எதிர்ப்பை பயன்படுத்தி ஆட்சியை பிடித்து விடலாம் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வந்தன. ஆனால் ராகுல் காந்தி வருகையை எதிர்த்து தமிழக மக்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தமிழர் நலனுக்கு எதிரான செயல்பாடுகளை வெளி உலகிற்கு கொண்டு வந்து விட்டது.
இவ்வாறு சற்றும் எதிர்பார்க்காத நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து #GoBackRahul மற்றும் #GoBackPappu என்ற ஹேஸ்டேக்கில் சமூக வலைத்தளங்களில் எழுந்த
விமர்சனங்கள் திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.