தமிழகத்திற்காக பாஜக வின் அடுத்த அதிரடி திட்டம்

0
103
BJP Plan for Tamil Nadu
BJP Plan for Tamil Nadu

தமிழகத்திற்காக பாஜக வின் அடுத்த அதிரடி திட்டம்

தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சியை மேம்படுத்த  15-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் `கால் சென்டர்கள்’ எனப்படும் அழைப்பு மையங்களை பாஜக உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேச தேர்தலில் அக்கட்சி கையாண்டு வெற்றி பெற்ற இந்த ஃபார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொகுதிவாரியாக தங்கள் கட்சிக்குள்ள செல்வாக்கு, வெற்றிவாய்ப்பு உள்ளிட்ட களநிலவரங்களை நேரில் ஆராய்ந்து கட்சியின் தேசிய தலைமைக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்ததாக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களை வாக்குச்சாவடி வாரியாக நியமித்து, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களையும் தேசிய தலைவர்கள் விரைவில் சந்திக்க உள்ளனர். இவ்வாறு நியமிக்கப்படும் நிர்வாகிகளிடமிருந்து களநிலவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும், தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் தமிழகத்தில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக அழைப்பு மையங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கெனவே, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய மையங்கள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலில் திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளுக்கு ஒரு மையம் உள்ளிட்ட 7 மையங்களை உடனடியாக உருவாக்கும் முயற்சியில் பாஜக கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திற்காக பாஜக வின் அடுத்த அதிரடி திட்டம்
BJP Plan for Tamil Nadu

இது தொடர்பாக, பாஜகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, இலவச எரிவாயு சிலிண்டர் பெற்றது உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளின் புள்ளிவிவரங்களையும்,அவர்களின் கருத்துகளையும் இம்மையங்கள் மூலம் சேகரித்து அவர்களுடனும் பாஜக தலைவர்கள் பேசுவதற்கு இந்த அழைப்பு மையங்கள் உதவும். மேலும், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான வழிகாட்டுதல் மையமாகவும் இவை திகழும் என்றும் கூறியுள்ளார்கள்.

அடுத்த கட்டமாக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியுள்ள இணையதள செயலிகளை செல்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொடுப்பது, பிரதமரின் உரைகள், அறிக்கைகள், மத்திய அரசின் செயல்பாடுகள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியிலும் இம்மைய பொறுப்பாளர்கள் ஈடுபடுவார்கள். இவை அனைத்தையும் செயல்படுத்த இம்மையங்களில் அனைத்து நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளும் உருவாக்கப்படவுள்ளது” என்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here