BJP Operation Lotus failed 3rd Time in Karnataka-News4 Tamil Online Tamil News Channel
BJP Operation Lotus failed 3rd Time in Karnataka-News4 Tamil Online Tamil News Channel

தோல்வியடைந்த ஆபரேஷன் லோட்டஸ் தொடர் தோல்வியில் பாஜகவினர் அதிர்ச்சி

கர்நாடக மாநிலத்தில் நடந்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக வினர் கையாண்ட ஆபரேஷன் லோட்டஸ் நடவடிக்கை கடைசியில் தோல்வியில் முடிந்துள்ளது.

கடந்த 7 மாதங்களாக கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்த்து எப்படியாவது அங்கு பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும் என்று அந்த கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக எடுத்துவரும் இந்த நடவடிக்கையே ஆபரேஷன் லோட்டஸ்.பல முயற்சிகளுக்கு பிறகும் ஆட்சியை கவிழ்க்க முடியாததால் இந்த திட்டத்தை கைவிட்டதாக பாஜக வினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குறிப்பிட்ட எம்எல்ஏக்களை பதவி விலக செய்து சட்டசபையில் அவர்களின் பலத்தை குறைத்து ஆட்சியை கவிழ்ப்பது தான் பாஜகவின் திட்டம். இதற்கு பிறகு தங்களிடம் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தை கொண்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றும் பாஜகவினர் திட்டமிட்டு வந்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஆபரேஷன் லோட்டஸ் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள்.

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிப்பது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்து தோல்வி மட்டுமே கிடைத்தது.அதனையடுத்து மூன்றாவது முறையாக முயற்சி செய்த இந்த திட்டமும் தோல்வியிலே முடிந்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறியதாவது தற்போது ஆட்சியை கலைத்தால் நடைபெற போகும் நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருக்கும். ஆட்சியில் இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பலம் அதிகரிக்கும்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் பாஜக இந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தான் கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜகவினர் கட்டுப்பாட்டில் மும்பையில் இருப்பதாக தகவல் பரவியது. இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் எதிர்பார்த்த மாதிரி அவர்கள் யாரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்கவில்லை.

இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக ஆரம்பித்த ஆபரேஷன் லோட்டஸ் நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக கூறுகின்றனர்.இதை பாஜக வை சேர்ந்த முக்கிய தலைவர்களே ஏற்று கொண்டதாக கூறுகிறார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் தோல்வியை அடுத்து கர்நாடகத்தில் ஆட்சியமைக்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது பாஜகவினருக்கு பின்னடைவாகவே பார்க்கபடுகிறது. இதனால் பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலக்கத்தில் உள்ளனர்.