BJP Govt Replaced Anbumani Ramadoss 108 Ambulance Scheme by Single Emergency Helpline Number 112 - News4Tamil Online Tamil News Live Today2
BJP Govt Replaced Anbumani Ramadoss 108 Ambulance Scheme by Single Emergency Helpline Number 112 - News4Tamil Online Tamil News Live Today

அன்புமணி ராமதாஸின் சாதனை திட்டமான 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை புதிய திட்டத்தின் மூலம் மறைக்க முயற்சிக்கும் மத்திய அரசு

அவசர தொலைபேசி எண்கள் 1937 ஆம் ஆண்டு லண்டனில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது பல நாடுகளில் வெவ்வேறு அவசர எண்கள் உள்ளன. இந்த எண்கள் பெரும்பாலும் மூன்று-இலக்க எண்களை உடையது. இதனை  எளிதில் நினைவுப்படுத்தி கொள்ள  முடியும்  என்ற நோக்கத்தில் இவ்வாறு தொடங்கப்பட்டது.பொதுமக்களின் அவசர கால உதவிக்கு இந்த எண்கள் மிகவும் உதவியாக உள்ளது.

இந்தியாவில் தற்போது செயல்படும் அவசர  மீட்பு  மேலாண்மை தொடர்பு   எண்கள் காவல் துறை உதவிக்காக 100 , மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் ,எதிர்பாரத தீ விபத்திற்கு 101 தீயணைப்பு படை  முதலிய சேவைகளை மக்கள் இதுவரை பயன்படுத்தி வருகின்றனர்.இதில் 108 ஆம்புலன்ஸ் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்தபோது கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் தொடர்ந்து வந்த தாய்சேய் இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டது. இந்த திட்டம் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு உலக அளவில் பெருமை தேடி தந்தது.

ஆனால்  தற்போது இவை அனைத்து சேவைகளுக்கும் ஒற்றை எண் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஒற்றை எண்ணின் மூலம் பல அவசர உதவிகளை மக்கள் உடனுக்கு உடன் எளிதில் பயன்படுத்த இயலும் .

BJP Govt Replaced Anbumani Ramadoss 108 Ambulance Scheme by Single Emergency Helpline Number 112 - News4Tamil Online Tamil News Channel
BJP Govt Replaced Anbumani Ramadoss 108 Ambulance Scheme by Single Emergency Helpline Number 112 – News4Tamil Online Tamil News Channel

தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் அவசர கால உதவிகளுக்கு 112 என்னும் புதிய தொலைபேசி எண் சேவை நாளை  முதல் தொடங்க உள்ளது .இந்த திட்டத்திற்கு ரூ 321.69 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து 19ஆம்  தேதி முதல் தமிழகம், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், கேரளம், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்களில் அமல்படுத்தபடவுள்ளது .

அவசர காலத்தில் 112 என்ற ஒரே எண்ணில் அணைத்து சேவைகளும் பெற முடியும் .112 என்ற எண்ணை  ஸ்மார்ட் போன் மற்றும் சாதாரண மொபைலிலும் பயன்படுத்தலாம்.இந்த எண்ணை சிம் கார்டு இல்லையெனினும் பயன்படுத்த இயலும். இதனை பயன்படுத்தும் முறை ஸ்மார்ட் போன் எனில்  அதை ஆன் செய்ய பயன்படுத்தப்படும் பொத்தானை 3 முறை அழுத்தினால் அவசர உதவி சேவை மையத்திற்கு அழைப்பு செல்லும்.சாதாரண மொபைல் எனில் 5 ஆம் எண்  அல்லது 9 ஆம் எண்  பொத்தானை நீண்ட நேரம் அழுத்தினால் அவசர உதவிக்கு அழைப்பு செல்லும்.112 என்ற செயிலியை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்தும் உதவி பெறலாம் .

112 அவசர சேவை அதிகாரிகள் பொதுமக்கள் உதவிக்குக்கேற்ப அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள காவல்துறை ,தீயணைப்பு ,சுகாதாரத்துறை  மற்றும் பிற உதவிமையங்கள் ஒன்றுக்கு தகவல் அனுப்பப்படும் அந்த தகவல் மூலம் சம்மந்தபட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு  உதவி செய்யவர்கள் .இந்த திட்டம் அமெரிக்காவில் 911 என்ற எண்ணின் மூலம் செயல் பட்டு வருகிறது .அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் 112 என்னும் அவசர உதவி சேவை பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் 14 மாநிலங்களில் செயல்படுத்தவுள்ளது.

ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக எண்கள் இருக்கும் போதே சில நேரங்களில் தொலைதொடர்பு பிரச்சனைகளால் இந்த அவசர சேவைகளை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் அனைத்து அவசர சேவைக்கும் ஒரே எண்ணை அறிமுகபடுத்தும் திட்டம் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.மேலும் மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமல்படுத்தபடும் இந்த திட்டத்தின் மூலம் காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆட்சியின் போது முன்னாள் சுகாதார துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்களால் கொண்டு வரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை மறைப்பதற்கான முயற்சியாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.