ஆஸ்திரேலியா அணியின் சொதப்பலால் ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது

0
128
India Recovered by Pujara’s century in India vs Australia Test Series -News4 Tamil Online Tamil News
India Recovered by Pujara’s century in India vs Australia Test Series -News4 Tamil Online Tamil News

ஆஸ்திரேலியா அணியின் சொதப்பலால் ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆஸ்திரேலியா அணியின் சொதப்பலால் ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்துவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் சொதப்பிய நிலையில் ஆட்டம் பரப்பரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும்  முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி முடிவு செய்தது.

முதலில் பேட் செய்த இந்தியா முன்னணி வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் 250 ரன் மட்டுமே எடுத்த நிலையில்அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டத்தை  இழந்தது. இதற்கு பிறகு ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இந்திய அணி விட ஆஸ்திரேலியா அணியும் மோசமாக விளையாடியதால்   98.4 ஓவர்களில் 235 ரன்கள் மட்டுமே எடுத்து எல்லா விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டத்தை முடித்து கொண்டது.

இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 15 ரன்கள் முன்னிலையுடன் தனது 2–வது இன்னிங்சை விளையாடியது. இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கிய இந்திய அணி 307 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு  323 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. 323 ரன்கள் வெற்றி இலக்குடன் பயணத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்படும் இந்நிலையில் அடுத்து ஒரு நாள் மட்டுமே உள்ளது. அங்கு பெய்து வரும் மழைக்கு இடையேயும் இரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. இன்னும் 6 விக்கெட்டுகளை மட்டுமே வைத்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் 31 ரன்களும், ஹெட் 11 ரன்களும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் பந்து வீச்சாளரான அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஷமியும் இந்த ஆட்டத்தில் அசத்தினார். இருவரும் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்களை திணறடித்துவிட்டனர். 

கடந்த 1902-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தான்200 ரன்களுக்கு அதிகமான இலக்கை ஆஸ்திரேலியா அணி  சேஸிங் செய்தது. அதன் பிறகு அங்கு விளையாடியமற்ற போட்டிகளில் இதுவரை 300 ரன்களுக்கு அதிகமாக சேஸிங்செய்தது இல்லை. அந்த வகையில் இது இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலையைஏற்படுத்தியுள்ளது இவ்வாறு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம்கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here