சமூக வலைதள பயனாளர்களின் தகவல் திருட்டை தடுக்க புதிய கட்டுபாடுகள் அவசியம்- ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்

0
121
Apple CEO Tim Cook Says Tech Regulation is Inevitable-News4 Tamil Online Tamil News Website
Apple CEO Tim Cook Says Tech Regulation is Inevitable-News4 Tamil Online Tamil News Website

சமூக வலைதள பயனாளர்களின் தகவல் திருட்டை தடுக்க புதிய கட்டுபாடுகள் அவசியம்- ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்

தனி நபர்களின் தகவல் திருட்டை தடுக்கவும், அவர்களின் விவரங்களைப் பாதுகாக்கவும் சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து அதற்காக புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டிம் குக் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் மற்றும் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா கன்சல்டன்சி நிறுவனமும் இணைந்து சமூக வலைத்தளங்களில் செயல்படும் பல லட்சக்கணக்கான ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை வெளியிட்ட விவகாரம் பெரும் பிரச்சனையைக் கிளப்பியது. சமூக வலைத்தளங்களில் சிறப்பாக செயல்படும் இந்த ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்கள் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் முறைகேடுகளை நடத்த உதவி செய்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை வைத்தனர். பின்னர் இதற்காக ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் மீது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்பிறகு அவரும் பயனாளர்களின் விவரங்களைப் பாதுகாப்பதில் ஃபேஸ்புக் எப்போதுமே தீவிரமாக இருந்துள்ளது,இனியும் இது போல நடக்காது என்று கூறினார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஃபேஸ்புக் நிறுவனர் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, ஃபேஸ்புக் நிறுவன முதலீட்டாளர்களே அவரைப் பதவி விலக வேண்டி பிரச்சனை செய்கின்றனர்.

இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் செயல்படும் தனிநபர்களின் தகவல் வெளியிடல், தகவல் திருட்டு போன்ற விவகாரங்கள் உலக அளவில் அரசியல் ரீதியாகவும், சமூகப் பொருளாதார ரீதியாகவும் பெரும் விவாதங்களையும்,சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது. இது பிரச்சனை குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டிம் குக் அளித்த பேட்டியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

Apple CEO Tim Cook Says Tech Regulation is Inevitable-News4 Tamil Online Tamil News Portal
Apple CEO Tim Cook Says Tech Regulation is Inevitable-News4 Tamil Online Tamil News Portal

ஃபேஸ்புக் தகவல் திருட்டு செய்தி பற்றி மேலும் படிக்க இங்கு தொடருங்கள்.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்

சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் இது போன்ற ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் தனக்கு விருப்பம் இல்லையென்றாலும் சமீப காலங்களில் நடந்த தொழில்நுட்ப முறைகேடுகளால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் பயனாலர்களான தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கும் வகையிலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றது என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் முன்னெடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து அவர் மேலும் கூறியதாவது, “பொதுவாக, நான் இது போன்ற ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பவன் அல்ல. தற்போது எனக்கு திறந்த சந்தையின் மீது தான் நல்ல நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அந்த திறந்த சந்தை என்பது பல்வேறு வகைகளில் சிக்கலானது என்பதை இது போன்ற பிரச்சனைகளின் மூலம் நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் என்ற கட்டாயமாகிறது.

கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் இது போன்ற பிரச்சனைகளின் விளைவைப் பார்க்க முடிந்தது. எனவே தற்போதுள்ள காலகட்டங்களில் சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவுகோலில் எடுக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், வர்த்தக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

#Apple #CEO #TimCook #Says #Tech #Regulation#Inevitable

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here