தன்னை பார்க்க வந்த சிறுவனை காரில் அமர வைத்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறிய அன்புமணி ராமதாஸ்

0
839
Anbumani Ramadoss Advising for Small Child To Study Well-News4 Tamil Online Tamil News Website
Anbumani Ramadoss Advising for Small Child To Study Well-News4 Tamil Online Tamil News Website

தன்னை பார்க்க வந்த சிறுவனை காரில் அமர வைத்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறிய அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் அவர்களை  பார்ப்பதற்காக ஆர்வத்துடன் சாலையின் ஓரமாக  நின்று கொண்டிருந்த சிறுவனை அழைத்து, தன் காரில் அமர வைத்தவர்.சிறுவனிடம் நன்றாக படித்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகம் மூன்றாவது சுரங்கம் அமைக்க முயற்சி செய்து வருகிறது. NLC நிர்வாகத்தின் இந்த செயலை  கண்டிக்கும் விதமாக பாமக சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் இன்று நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு தலைமையேற்க அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறைஅமைச்சருமான  அன்புமணி ராமதாஸ் இன்று நெய்வேலிக்கு வந்திருந்தார். அப்போது, சாலை வழியாக அன்புமணி ராமதாஸ் காரில்  செல்வதை, ஓரமாக நின்றபடி சிறுவன் ஒருவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளான். 

வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த சிறுவனை கவனித்த அன்புமணி ராமதாஸ், உடனடியாக தன் காரை நிறுத்தச் சொல்லி, சாலை ஓரமாக நின்று  கொண்டிருந்த சிறுவனை அழைத்து தன் இருக்கையில் அமர வைத்துள்ளார், அப்போது, “நன்றாகப் படித்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வாறு அந்த சிறுவனுக்கு அன்புமணி ராமதாஸ் காரில் அமர வைத்து அறிவுரை வழங்கும் அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் அரசியல் அல்லது சினிமா பிரபலங்களை சாதரனவர்கள் நெருங்க நினைத்தாலே விரட்டப்படும் இந்த சூழலில் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுவனை அழைத்து தன்னுடைய காரில் அமரவைத்து அறிவுரை கூறிய அன்புமணி ராமதாஸ் அவர்களின் செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Anbumani Ramadoss Advising for Small Child To Study Well

author avatar
Parthipan K