திமுகவில் இணைவது பற்றி அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அளித்த விளக்கம்

0
676
AMMK Thanga Tamilselvan Gives Explanation for Rumor About DMK Joining-News4 Tamil Online Tamil News Website
AMMK Thanga Tamilselvan Gives Explanation for Rumor About DMK Joining-News4 Tamil Online Tamil News Website

திமுகவில் இணைவது பற்றி அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அளித்த விளக்கம்

கடந்த சில நாட்களாக திமுகவில் இணைவதாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகளுக்கு அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் செந்தில் பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் அக்கட்சியில் இருக்கும் மற்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என பலர் திமுகவிற்கோ அல்லது அதிமுகவிற்கோ செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனையடுத்து இதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் அதிமுகவின் அமைச்சர் தங்கமணி, டிடிவி தினகரனின் மனசாட்சி என்று கூறப்படும் தங்க தமிழ்ச்செல்வனையும், கதிர்காமுவையும் சந்தித்து அதிமுகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு யோசிக்க நேரம் வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும், இந்த சூழ்நிலையில் அதிமுகவில் சேர்ந்தால் தனக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்காது என உணர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் வரும் 27-ம் தேதி அன்று திமுகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முதல் பரவி வரும் இந்த தகவல்கள் தான் தமிழக அரசியலின் முக்கிய விவாதமாக இருந்து வந்தது.

இந்நிலையில் அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலக இருக்கிறார் என்ற தகவல் குறித்து அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவரது பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் திமுகவில் சேர வேண்டும் என்ற விருப்பத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வதந்தியைபரப்பி வருகிறது இதை யாரும் நம்ப வேண்டாம்  நான் என்றும் சசிகலாவின் ஆணைக்கிணங்க டிடிவி தினகரன் வழியில் என் பயணம் தொடரும் துரோகத்தை  வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி என பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சில நாட்களாக பரவி வந்த இந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here