அதிமுகவினர் சம்பந்தபட்ட தருமபுரி பஸ் எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூவரும் விடுதலை 

0
134
ADMK'S 3 Convicts Was Released in Dharmapuri Bus Fire Case
ADMK'S 3 Convicts Was Released in Dharmapuri Bus Fire Case

அதிமுகவினர் சம்பந்தபட்ட தருமபுரி பஸ் எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூவரும் விடுதலை

தமிழக ஆளும் கட்சியான அதிமுகவினர் சம்பந்தபட்ட தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில்  ஆயுள் தண்டணை பெற்று சிறையில் உள்ள குற்றவாளிகள் மூவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இந்த வழக்கில் ஆளுநர் ஒப்புதல் அளித்ததின் பேரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் இன்று விடுதலையாகிறார்கள்.

இந்தியாவையே உலுக்கிய தருமபுரியில் பேருந்து எாிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த அதிமுகவை சேர்ந்த குற்றவாளிகள்  3 பேரும் ஆளுநரின் ஒப்புதலுடன் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தீர்ப்பு வந்த அன்று  கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் தருமபுரிக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். தருமபுரி அருகே விவசாயக் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்தை நிறுத்திய அதிமுகவினர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினர். இந்த சம்பவத்தில், பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் தீயில் கருகி பலியாயினர்.

இதனை அடுத்து இந்தியாவையே உலுக்கிய இந்த தருமபுரியில் பேருந்து எாிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், மாது (எ) ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகிய 3 பேருக்கும் சேலம் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது

குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடந்த 2010-ம் ஆண்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மூவரும் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு செய்தனர்.

ADMK'S 3 Convicts Was Released in Dharmapuri Bus Fire Case-News4 Tamil Online Tamil News Channel
ADMK’S 3 Convicts Was Released in Dharmapuri Bus Fire Case-News4 Tamil Online Tamil News Channel

இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து குற்றவாளிகளான அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், தொடர்ந்து இவர்களை காப்பாற்றும் வகையில் குற்றவாளிகள் தரப்பில், தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஏ.கே.சிக்ரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 2016-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் வழக்கில் தொடர் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் முனியப்பன், ரவீந்திரன்,நெடுஞ்செழியன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி நீண்டகாலம் சிறையிலிருக்கும் நிறைய கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் தர்மபுரி பேருந்து எரிப்புக் குற்றவாளிகளும் இருந்தனர். இதற்கு எதிர்கட்சிகள்,பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் பேருந்து எரிப்பு குற்றவாளிகளான இந்த மூவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அவர்களின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று மூவரையும் விடுவிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு அது சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து தருமபுரியில் பேருந்து எாிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த அதிமுகவை சேர்ந்த குற்றவாளிகள் மூவரும் விடுதலை ஆகிறார்கள்.

இந்நிலையில் இவா்களை விடுவிக்க ஆளுநா் ஒப்புதல் தொிவித்ததைத் தொடா்ந்து மூவரும் பகல் 12.15 மணிக்கு வேலூா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடா்பாக சிறை அதிகாாிகள் கூறுகையில், 3 பேரையும் விடுவிக்கக் கோாி ஆணை வந்துள்ளது. ஆனால் அவா்கள் தற்போது வரை விடுவிக்கப்படவில்லை என்றும் தொிவித்துள்ளனா்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

ADMK’S 3 Convicts Was Released in Dharmapuri Bus Fire Case

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here