ADMK and DMK MPs Suspended for Mekedatu Dam Issue-News4 Tamil Online Tamil News Website
ADMK and DMK MPs Suspended for Mekedatu Dam Issue-News4 Tamil Online Tamil News Website

மேகதாது அணைக்கு எதிராக போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்

தம்பிதுரை மற்றும் வேணுகோபால் தவிர்த்த மற்ற அதிமுக எம்பிக்கள் அனைவரையும் மக்களவையிலிருந்து ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாராஜன் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலங்களவையிலும் திமுக மற்றும் அதிமுக எம்பிக்களை இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்.

அதிமுகவுக்கு லோக்சபாவில் மொத்தம் 37 எம்பிக்கள் உள்ளனர். மாநிலங்களைவையில் உள்ள 37 எம்பிக்களில் தம்பிதுரை மற்றும் வேணுகோபால் ஆகிய இருவரையும் தவிர மற்ற அனைவரையும் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம் ராஜ்யசபாவிலும் அதிமுக எம்பிக்கள் ஏழு நபர்களையும், திமுக எம்பிக்களில் கனிமொழி உள்ளிட்ட 5 நபர்களையும் இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்வதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக எம்பிக்களின் இந்த போராட்டத்தின் காரணமாக இன்று பலமுறை ராஜ்யசபா தலைவர் அவையை ஒத்தி வைத்தார். இதைபோலவே லோக்சபாவிலும் அதிமுக எம்பிக்கள், மேகதாது அணை  விவகாரத்திற்காக தொடர்ந்து முழக்கமிட்டனர். நாடாளுமன்றம் கூடியதிலிருந்தே அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து இது போன்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேகதாது அணைக்கு எதிராக தமிழக எம்பிக்களின் போராட்டத்தால் அவையின் நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்படுவதால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், இது குறித்து பல முறை எச்சரித்தும் எம்.பி.க்கள் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில உரிமைக்காக போராடுவது வழக்கமானதாக இருந்தாலும் இதுபோன்ற சஸ்பெண்ட் நடவடிக்கை மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாக கருதப்படுகிறது. இதனிடையே, சபாநாயகரின் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை அநீதியானது என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

ADMK and DMK MPs Suspended for Mekedatu Dam Issue