Actor Rajinikanth Political Stand In Lok Sabha Election 2019
Actor Rajinikanth Political Stand In Lok Sabha Election 2019

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

பல வருடங்களுக்கு பிறகு அரசியலுக்கு வருவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று தெரிவித்துள்ளார். வழக்கம் போலவே தற்போதும் ரஜினிகாந்த் அரசியல் ஆர்வம் உள்ள தனது ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக காங்கிரஸ் கட்சி பாஜக அரசால் பாதிக்கப்பட்ட மாநில கட்சிகளை ஒன்று திரட்டி தேசிய அளவில் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.இந்நிலையில் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ரஜினிகாந்த் ஆதரவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கும்,அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆவலில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்தின் மக்கள் மன்றம் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளது பெரும் ஏமாற்றமே.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ” வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. தமிழக சட்டமன்றத்தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக்கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ, எந்தக்கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறோர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.