நடிகர் அஜித்தின் உலக அளவிலான அடுத்த சாதனை

0
221
Ajith Drone Australia-News4 Tamil

நடிகர் அஜித்தின் உலக அளவிலான அடுத்த சாதனை

தமிழ் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் அரசியலில் தங்கள் இருப்பை காட்டி கொள்ள முயற்சிக்கும் இந்த சூழ்நிலையில் நடிகர் அஜித் எப்போதும் போல தனித்துவமாக செயல்பட்டு உலக அளவில் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பதில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நடிகர் அஜித்தின் உலக அளவிலான அடுத்த சாதனை
Actor Ajith Team with Drone

நடிகர் என்பதைத் தாண்டி கார் ரேசர், பைக் ரேசர், மெக்கானிக், புகைப்படக் கலைஞர் என பல துறைகளில் தடம் பதித்தவர் நடிகர் அஜித். இந்தியாவிலேயே பைலட் உரிமம் பெற்ற நடிகரும் இவரே.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். அதன் மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். அஜித்தின் வழிகாட்டுதலில் ‘தக்‌ஷா’ அணியின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து உலக அளவிலான சாதனையை படைத்தது.

இதே குழு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் – 2018’ போட்டியில் கலந்துகொண்டது. மருத்துவ சேவையில் ஆளில்லா விமானங்களின் பணி என்ற கருப்பொருளில் இந்தப் போட்டி நடைபெற்றது.

Ajith Drone-News4 Tamil
Ajith Drone-News4 Tamil

இதில் நீண்ட நேரம் பறத்தல், தேவைப்படும்போது உடனடியாகத் தரை இறங்குதல், விமானக் குழுவின் நேர்காணல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

இதில் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் ஆளில்லா விமானத்துக்கும் இந்தியாவின் தக்‌ஷா ஆளில்லா விமானத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதில் நூலிழையில் முதலிடத்தைத் தவறவிட்ட தக்‌ஷா விமானம், சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் கமலஹாசன்,ரஜினிகாந்த் மற்றும் விஷால் போன்றவர்கள் திரைத்துறையில் பெற்ற விளம்பரத்தை வைத்து அரசியலில் வெற்றி பெற முயற்சிக்கும் நிலையில் நடிகர் அஜித்தின் முயற்சி அவரது தனித்துவத்தை நிலைநிறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here