Actor Ajith Explains About Political Stand-News4 Tamil Online Tamil News Channel
Actor Ajith Explains About Political Stand-News4 Tamil Online Tamil News Channel

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் அஜித் அளித்த புதிய அறிவிப்பு

நடிகர் அஜித் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தனது ரசிகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் விளக்கமளித்துள்ளார்.

நான் தொழில் முறையில் சினிமாவிற்கு வந்தவன்.
நான் அரசியல் செய்யவோ மற்றவர்களுடன் மோதவோ வரவில்லை இங்கு வரவில்லை.இதையே தான் என் ரசிகர்களுக்கும் வலியுறுத்துகிறேன் என விளக்கமான அறிக்கை ஒன்றை நடிகர் அஜித் வெளியிட்டுள்ளார்.

திருப்பூரில் பாஜகவினர் நடத்திய நிகழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் நூற்றுகணக்கான நபர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த இணைப்பு விழாவில் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் திரைப்பட நடிகர்களிலே அஜித் நேர்மையானவர்,தான் சம்பாதித்த பணத்தை கொண்டு மக்களுக்கு உதவ நினைப்பவர் என்று பாராட்டி பேசினார்.மேலும் அஜித் ரசிகர்களும் நல்லவர்கள் தான் அவர்கள் மோடியின் திட்டத்தை மக்களுக்கு எடுத்து செல்வதன் மூலம் தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழிசை சௌந்தராஜன் அவர்களின் இந்த பேச்சு தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நடிகர் அஜித் அவர்களை பாஜக விற்கு இழுக்க முயற்சி செய்கிறார்கள் என தகவல்கள் பரவின. இந்நிலையில் தான் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதத்தில் இந்த அறிக்கையை நடிகர் அஜித் சார்பாக வெளியிட்டுள்ளார்கள். மேலும் இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது.

Actor Ajith Explains About Political Stand-News4 Tamil Online Tamil News Channel
Actor Ajith Explains About Political Stand-News4 Tamil Online Tamil News Channel

எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை. ஒரு சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல். நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன்.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை.மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை.என் ரசிகர்களிடம் இதையே தான் நான் எதிர்பார்க்கிறேன்.உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும்.என் பெயரோ, என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் விரும்புவதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.