18 mlas appeal against disqualification judgement in court says thangatamilselvan-news4 tamil online tamil news website
18 mlas appeal against disqualification judgement in court says thangatamilselvan-news4 tamil online tamil news website
18 MLA க்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக தங்கதமிழ்செல்வன் அறிவிப்பு

18 MLA க்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக தங்கதமிழ்செல்வன் அறிவிப்பு-18 mlas appeal against disqualification judgement in court says thangatamilselvan:

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த 18 MLA க்களும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய  முடிவு செய்துள்ளதாக தினகரன் அணியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் பேட்டியளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆளுங்கட்சிக்கு எதிராக முதலமைச்சர் பழனிசாமி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக் கோரி டிடிவி தினகரன் அணியை சேர்ந்த அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர்.இந்த விவகாரத்தில் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி 18 எம்.எல்.ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநயகர் தனபால் உத்தரவிட்டார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 16ல் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜியும், தகுதி நீக்கம் செல்லாது என்று நீதிபதி சுந்தரும் இருவேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இந்த மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு 3வது நீதிபதி சத்ய நாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டது. 3வது நீதிபதி சத்ய நாராயணன் நேற்று வழங்கிய தீர்ப்பில், தகுதி நீக்கம் செல்லும் என்று உத்தரவிட்டார்.

மேல் முறையீடு

இந்த தீர்ப்பு தொடர்பாக மதுரையில் டிடிவி தினகரன் தலைமையில் 18 எம்.எல்.ஏக்களும் ஆலோசனை நடத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார். சபாநாயகரின் முடிவு தவறு என்பதை உலகிற்கு உணர்த்த மேல்முறையீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3வது நீதிபதி அளித்த தீர்ப்பில் பல குறைகள் இருப்பதாக அவர்கள்  வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாகவும், தீர்ப்பை எதிர்த்து 30 முதல் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்வதாகவும் அவர் கூறினார்.இந்த மேல் முறையீடு வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க கோருவதாகவும்,மேல்முறையீட்டில் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தர் கூறிய தீர்ப்பே வரும் என நம்புவதாகவும் கூறினார்.

ஆட்சி அதிகாரத்தை வைத்து தமிழக அரசு தங்களை தண்டிப்பதாகவும்,மேல்முறையீடு நடக்கும் போது இடைத்தேர்தல் வந்தாலும் மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 18 பேரும் போட்டியிடுவதாகவும் கூறினார்.ஏற்கனவே திட்டமிட்டபடி வளர்ச்சிப் பணி புறக்கணிப்பை கண்டித்து, 22 தொகுதிகளிலும் நவம்பர் 10ஆம் தேதி முதல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும்,தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் விரைவில் சசிகலாவை சந்திப்பதாகவும் கூறினார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.